நேற்று இரவு சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பிரச்சராம் மேற்கொண்டார். இந்நிலையில் அவர் பேசியதாவது
” தமிழக அரசியலில் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். தி.மு.கவினர் மொத்த சொத்தையும் கோவைக்கு எடுத்து வந்தாலும், கோவை மக்கள் நேர்மையாக வாக்காளிப்பர்.
அடுத்த 7 நாட்களுக்கு நமது தொலைபேசிக்கு அழைப்பு வந்தால், அலைபேசியை எடுத்து ஹலோ சொல்வதற்கு பதிலாக தாமரை வணக்கம் என சொல்ல வேண்டும். ஹலோ என்ற ஆங்கில வார்த்தையை நாம் பயன்படுத்த வேண்டாம். தொலைபேசியில் பேசும் போது தாமரை வணக்கம் என்று சொல்லும்போது, தாமரை சின்னம் அனைவருக்கும் போய்ச் சேரும். கோவையில் தாமரை மலர வைப்போம்.
தி.மு.க – காங்கிரஸ் இந்தியா கூட்டணியில், பிரதமர் வேட்பாளர் என்று யாரும் இல்லை. 21 தொகுதியில் மட்டும் போட்டியிடும் தி.மு.க, நாட்டிற்கு என்ன செய்ய முடியும். அ.தி.மு.க அவர்களது பிரச்சாரத்தில், அவர்கள் வென்றால் கோரிக்கைகளை வலியுறுத்துவோம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பா.ஜ.க உறுப்பினர் வேண்டும்.
கடந்த 10 ஆண்டு காலமாக , நமது பிரதமர் மோடியை பயன்படுத்தி, கோவையை சேர்ந்த, இதற்கு முன்பு இருந்த கோயம்புத்தூர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறிவிட்டார்கள். இதை நாம் இந்த தேர்தலில் சரி செய்ய வேண்டும்.
வரும் 2026 தேர்தலில் தமிழகத்தில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கு, இந்த நாடாளுமன்ற தேர்தல் அடித்தளமாக அமையும். கோவையின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு பெற தாமரையை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்.