Advertisment

டெல்லியில் அண்ணாமலை; தமிழகத்தில் நிர்மலா சீதாராமன்: பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ்?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லியில் தங்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வந்துள்ளார். இதனால், பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Annnamalai

டெல்லியில் அண்ணாமலை; தமிழகத்தில் நிர்மலா சீதாராமன்: பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ்?

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை டெல்லியில் தங்கி இருக்கிறார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வந்துள்ளார். இதனால், பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அறிஞர் அண்ணா குறிட்து பேசிய கருத்தால் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியை முறித்துக் கொண்டது. திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியது பா.ஜ.க-வுக்கு பெரும் இழப்பாக பா.ஜ.க தலைவர்களாலும் அரசியல் நோக்கர்களாலும் பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான்,அண்ணாமலையை பா.ஜ.க தேசியத் தலைமை டெல்லிக்கு அழைத்தது.

பா.ஜ.க தலைமையால் டெல்லிக்கு அழைக்கப்பட்ட அக்கட்சியின் அண்ணாமலை தொடர்ந்து டெல்லியில் தங்கி இருக்கிறார். இதனிடையே, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு வந்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்துள்ளார். கொடிசியாவில் வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென சென்று சந்தித்தனர்.

முன்னாள் சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ. அமல்கந்தசாமி, மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதனால், பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ் என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இனிமேல் தமிழக பா.ஜ.க விவகாரங்களை கவனித்துக் கொள்வார் என்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குவதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும் தெரிகிறது. இதனால், பா.ஜ.க மேலிடத்தின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024-ல் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கும் வேலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறிய ஒரு வாரத்திற்குப் பிறகு, பா.ஜ.க தலைவர்கள் தலைநகர் டெல்லியில் பல கூட்டங்களை நடத்தி, திராவிடக் கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் தமிழகத்தில் தனது கூட்டணியை வலுப்படுத்துவதற்கான தேர்தல் வியூகங்களை அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, திங்கள்கிழமை மாலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசியதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன. அவருடன் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.யும் அவருடைய நண்பருமான தேஜஸ்வி சூர்யாவும் டெல்லி வந்திருந்தார்.

டெல்லியில் என்ன நடந்தது என்பது குறித்து பா.ஜ.க வட்டாரங்கள் கூறியதாவது: “பா.ஜ.க உயர்மட்ட தலைவர்களுடனான அனைத்து சந்திப்புகளிலும், என்.டி.ஏ கூட்டணியில் எதிர்பாராத விரிசல் ஏற்பட்டதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களை விளக்குமாறு அண்ணாமலையிடம் கேட்கப்பட்டது. 39 லோக்சபா தொகுதிகள் உள்ள தமிழகத்தில் கூட்டணிக்கான மற்ற சாத்தியக்கூறுகளையும் உயர்மட்டக்குழு ஆராய்ந்து வருகிறது. மேலும், மாநில பா.ஜ.,வில் உள்கட்சி பிரச்னைகள் குறித்தும், அண்ணாமலை நடத்தி வரும் பாதயாத்திரை குறித்தும் விவாதித்தனர். பின்னர், அண்ணாமலையை ‘சில நாட்கள்’ புதுடெல்லியில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், கூட்டணி வியூகங்களை வகுக்க, பா.ஜ.க.வின் உயர்மட்ட தலைவர்களைக் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைக்கும் யோசனையுடன் அக்கட்சி ஆலோசித்து வருவதால், அண்ணாமலையின் கட்டுப்படுத்தப்படலாம், பேச்சுவார்த்தை நடத்தி, தற்போதுள்ள என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையைத் தொடரலாம என ஊகங்கள் எழுந்துள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியதால் பா.ஜ.க மேலிடம் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இனிமேல் மாநில விவகாரங்களை கவனித்துக்கொள்வார் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குவதில் அவருக்கு முக்கிய பங்கு இருக்கும் என்றும் தெரிகிறது. தமிழக பா.ஜ.க தலைவரை டெல்லியில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த மாவட்டத் தலைவர்கள் மற்றும் மையக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தை தமிழக ஒத்திவைத்தது.

தமிழக பா.ஜ.க-வில் குழப்பமான நிலவுவதாக எழுந்துள்ள ஊகங்களை நிராகரித்த தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அண்ணாமலை எங்கள் தலைவர்களை சந்திக்க டெல்லியில் இருப்பதால் பா.ஜ.க-வில் எந்த சலசலப்பும் இல்லை என்றும் இது வழக்கமான பிரச்னை என்று ஆங்கில செய்தி இணைய தளத்திடம் கூறியுள்ளார். “டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைவர்கள் மாநிலத் தலைவர்களை அழைப்பது வழக்கமானதுதான். மாநில பா.ஜ.க தலைவர் டெல்லியில் பிஸியாக இருப்பதால், மாநில மையக் குழு உறுப்பினர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க-வில் எல்லாம் நன்றாக இருக்கிறது, ஊகங்களுக்கு இடமில்லை” என்று நாராயணன் திருப்பதி கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment