தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகுப்பில் உள்ள ஊட்டச்சத்து மாவை தயாரிக்கும் வாய்ப்பை ஆவினுக்கு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து தொகுப்பில் உள்ள ஊட்டச்சத்து மாவை தயாரிக்கும் வாய்ப்பை ஆவினுக்கு வழங்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் இந்த டெண்டர் தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது : ”கடந்த ஜூன் 2022-ல், ஊட்டச்சத்து தொகுப்பில் நடைபெற்ற ஊழலை நாங்கள் வெளியிட்டோம். அப்போது பொங்கல் தொகுப்பை வழங்கிய, தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு இந்த டெண்டர் வழங்கப்பட்டது என்று தெரிவித்திருந்தோம். அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் உண்மை வெளிவந்துள்ளது. ” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திமுக சார்ப்பில் பேசிய ரவிந்தரன் “அண்ணாமலை சொல்வது முழுவதும் தவறான தகவல். தடை செய்யப்பட்ட எந்த நிறுவனத்திற்கும் டெண்டர் வழங்கப்படவில்லை “ என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“