கரும்பு கொள்முதல் விலை: மோடி உயர்த்தி விட்டார்; ஸ்டாலின் செய்வாரா? அண்ணாமலை கேள்வி

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனது எக்ஸ் தளத்தில் “  இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ. 315 லிருந்து, ரூ.340 ஆக உயர்த்தி அறிவித்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும், தமிழக பா.ஜ.க சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

 திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக, திமுக, விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.  

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: