சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு ஆட்டோவில் 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சாம்பவம் குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் 18 வயது இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் கூக்குரலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மனிதநேயமிக்க ஒருவரின் தலையீட்டால் கடத்தப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மிக சாதாரணமாகிவிட்டன. நமது சகோதரிகளுக்கு பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ? என பதிவிட்டுள்ளார்.
அதேபோல தமிழகம் முழுவதும் போதைப் பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறியுள்ளது. கஞ்சா, மெத்தபெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024 க்கு இடையில், தமிழ்நாட்டில் NDPS (போதை பொருள் சார்ந்த) வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1122 மட்டுமே. 2021 ஆம் ஆண்டில் (ஒரு வருடத்தில்), NDPS வழக்குகளில் மொத்த கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9632 ஆகும்.
தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் மெத்தம்பேட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் கைது செய்யப்படுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. எப்படி?
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாக இயங்கி வருகிறதா?" என்றெல்லாம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.