/tamil-ie/media/media_files/uploads/2019/09/acid-759.jpg)
Annamalai university second year B P Ed student acid attack victim
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகராட்சியில் அமைந்திருக்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நேற்று மனதை உறையவைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது . அப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை உடற்கல்வி பிரிவில் (பி.பி.எட்) இரண்டாம் ஆண்டு மாணவியான சுசித்ரா மீது ஆசிட் வீசப்பட்டுள்ளது. இதில், குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆசிட் வீசியது அதே வகுப்பில் படிக்கும் முத்தமிழன் என்கிற மாணவர் தான்.
தனது காதல் விருப்பத்திற்கு இசைவு கொடுக்காததால் இந்த முடிவை முத்தமிழன் எடுத்துள்ளார் என்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
சரியாக, நேற்று 8.30 மணி அளவில் சுசித்ரா தனது விடுதிக்குத் திரும்பி கொண்டிருக்கையில் முத்தமிழன் வழி மறித்து ஆசிட் வீசியுள்ளார். இதனால், சுசித்ரா விற்கு தலை மற்றும் கழுத்து பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, முத்தமிழனை அங்கு சுற்றியிருந்த மக்கள் கடுமையாக தாக்கி உள்ளனர்.
தற்போது சுசித்ரா மற்றும் முத்தமிழன் இருவருக்கும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை நடந்து கொண்டுவருகிறது.
இது போன்ற நிகழ்வுகள் நமது கலாச்சாரக் கட்டமைப்பை கேள்வி கேட்பாதாய் உள்ளன. எதை நோக்கி நகர்கிறோம் ? என்ற கேள்வியையும் முன்வைக்கின்றன. அரசாங்கம் இது போன்ற நிகழ்வுகளுக்கு தகுந்த சட்டத்தையும் , விழிப்புணர்வையும் ஏற்படுத்த முன் வரவேண்டும் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.