தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற்ற தொல்லியல் துறைக்கான அறிவிப்புகள் !
* தமிழர்கள் அதிகம் வசிக்கும் டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்தப்படும். இதற்கு முதல் கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு.
* மதுரையில் மொழிகளின் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
* 193 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்.
* ஆண்டுதோறும் உலக தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.
*8 இடங்களில் தொல்லியல் ஆய்வு - ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
1. சிவங்கங்கை - கீழடி
2. சேலம் - தெலுங்கனூர்
3. கோவை - வெள்ளலூர்
4. கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர்
5. கடலூர் - மணிக்கொல்லை
6. தென்காசி - கரிவலம்வந்தநல்லூர்
7. தூத்துக்குடி பட்டணமருதூர்
8. நாகப்பட்டினம்
கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ள ரூ.8 கோடி ரூபாய் நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஈரோட்டில் நொய்யல் அருங்காட்சியம் அமைக்க ரூ.22 கோடி நிதியும், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்க ரூ.21 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எழும்பூர் அருங்காட்சியகத்தில் ரூ.40 கோடியில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.