Annular Solar Eclipse 2019 : சூரிய கிரகணத்தை கண்டு ரசித்த தமிழக மக்கள்!
Annular Solar Eclipse 2019 tamil nadu: கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வானியல் அதிசயத்தை கண்டு வருகின்றனர் மக்கள்
Annular Solar Eclipse 2019 tamil nadu: கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வானியல் அதிசயத்தை கண்டு வருகின்றனர் மக்கள்
Annular Solar Eclipse 2019 : இந்த வருடத்தின் இறுதி சூரிய கிரகணம் இன்று தோன்றி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து கண்டு வருகின்றார்கள். வேற்றுக் கண்களால் இந்த சூரிய கிரகண நிகழ்வை காண கூடாது என்று மருத்துவர்கள் உட்பட பலரும் மக்களை எச்சரிக்கை செய்து வருகின்றனர். கர்நாடகாவின் மங்களூர், கேரளாவின் காஸர்காட், தலச்சேரி, கோழிக்கோடு, பாலக்காடு, தமிழகத்தின் கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த வானியல் அதிசயத்தை காண இயலும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தெரியும் சூரியகிரகணத்தை முறையான பாதுகாப்புடன் மக்கள் படங்கள் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
ஈரோடு பகுதியில் மேகமூட்டத்தால் சூரிய கிரகணத்தை பார்க்க இயலவில்லை
ஈரோடு பகுதியில் இன்று சூரிய கிரகணம் தெரியும் என்றும் பலரும் காத்திருந்த நிலையில், மேகமூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை காண முடியவில்லை. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், மற்றும் வானிலை ஆராய்ச்சியில் அதிகம் ஆர்வம் காட்டும் நபர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இன்று காலை சூரிய கிரகணம் நடைபெறும் நிகழ்வை நேரில் மக்கள் காண்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. முறையான பாதுகாப்புடன் மக்கள் சூரியகிரகணத்தை நேரில் காணும் காட்சி.
திருவனந்தபுரத்தில் சூரியகிரகணத்தை காணும் பொதுமக்கள்
கும்பகோணம்
கும்பகோணம் பகுதியில் கடுமையான மேகமூட்டம் மத்தியிலும் இன்று சூரிய கிரகணத்தை காண முடிந்தது. மேக மூட்டங்களுக்கு மத்தியில் சூரியனே நிலவு போன்று தோற்றமளித்ததை கண்டு மக்கள் மகிழ்ச்சி.