/indian-express-tamil/media/media_files/AZxiZ9sSL1hZY0Jn2osl.jpg)
லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (அக்.26) மாலை 5 மணி முதல் சோதனை நடத்தினர்.
Italakudi Registrars office | Anti-bribery police raid : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று (அக்.26) மாலை 5 மணி முதல் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில் சார்பதிவாளர் ஆண்ட்ரூ என்பவரின் இருசக்கர வாகனத்தில் புரோக்கர்கள் மூலம் இரண்டு கட்டுகளாக கொடுக்கப்பட்ட ரூ.60,000 ரூபாய் ரொக்கம் கணினி அறையில் 7,500 ரூபாய் ரொக்கம் மற்றும் சார் பதிவாளருக்கு கொடுக்க கொண்டு வந்த ரூபாய் 42,000 ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்காணித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்தச் சோதனையின் முடிவில் தான் கூடுதலாக எவ்வளவு பணம் கைப்பற்றப்படுகிறது என்பதும் யார் யார் மீது வழக்குகள் பதிவாகும் என்பதும் தெரியவரும்.
செய்தியாளர் த.இ. தாகூர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.