நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் என்ன நடந்தது?

சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாய் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையைக் கண்டித்து இன்று தமிழகத்தில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

By: Updated: February 15, 2020, 03:02:29 PM

குடியுரிமை திருத்தம் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் 1,000க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட  போராட்டத்தில் ஏற்பட்ட காவல்துறையின் அத்துமீறல்களை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று மாலை 5.30 மணியளவில் சென்னை வண்ணரப் பேட்டை பதட்டமாக மாறியது. அந்த பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் நடமாட்டம் இருந்தது . ஆர்ப்பாட்டம் நடத்த பிப்ரவரி 28ம் தேதி வரை தடை செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட முன் அனுமதியும் வாங்க வில்லை, உடனடியாக கலைந்து செல்லுங்கள் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது.

எதிர்ப்பில் கலந்து கொண்ட பெண்கள் இந்த கோரிக்கையை நிராகரித்தனர். இதுகுறித்து கூட்டத்தில் இருந்த ஒருவர் கூறுகையில், “நாங்கள் பிரதான சாலைக்கு கூட வரவில்லை, தெருக்களிலும் வீடுகளுக்கு முன்பு தான் எங்களது  எதிர்ப்புகளை தெரிவித்தோம். இந்த பதட்டம் தேவையற்றது” என்றார்.

பின்பு, காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தியது……அப்புறப்படுத்தியது.

வலுக்கட்டயாமாக 50க்கும் மேற்பட்ட மக்களை வாகனத்தில் ஏற்றி, அருகில் இருக்கும் சமூக விடுதியில் சிறை வைக்கபட்டனர்.

இதன் பிறகு தான்,(9 மணி அளவில்) வண்ணாரப்பேட்டை பகுதியில்  பதட்டம் அதிகமானது. சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. எதிர்ப்பாளர்களின்  எண்ணிக்கையும் அதிகமானது.

அந்த குறிகிய இடங்களில் 1000க்கும் அதிகமான மக்கள் கூடியது காவல் துறையினருக்கு ஒரு சவாலாக இருந்தது.

கூட்டத்தை கலைக்க போலீசார் மீண்டும் தடியடியில் இறங்கினர். பெண்கள் தாக்கப்பட்டனர், வலுகட்டயாமாக கைதும் செய்யப்பட்டனர்.

போரட்டக்கார்கள் தான் வன்முறையில் ஈடுபட்டதாக காவல் தரப்பில் சொல்லபப்டுகிறது. போலிஸ்கார்கள் மீது கல் வீசப்பட்டதாகவும், பின்பு கலவரம் கட்டுபடுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13-02-2020 முதல் 28-02-2020 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில், போக்குவரத்துப் பகுதிகளில், சாலை, தெருக்களில், கூட்டம் கூடவும், பேரணிகள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்பாட்டங்கள் மற்றும் மனித சங்கிலி அமைப்பது போன்றவற்றை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நள்ளிரவில், இஸ்லாம் தலைவர்களிடம்  ஆணையாளர் விசுவநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யபப்டுவார்கள் என்ற வாக்குறிதியையும் அளித்தார்.

இரவு முழுக்க அமைதி போராட்டம்:  சென்னையில் பல இடங்களில் இரவு முழுக்க போராட்டங்கள் தொடந்தன. அதிகாலை 1 மணியளவில் கூட,  மாநில அரசு CAA மற்றும் NPR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் 2. முதல்வர் பழனிசாமி உறுதி அளிக்க வேண்டும் 3. CAA ஐ திரும்பப் பெற வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பினர்.

இன்று தமிழகம் முழுவதும் போராட்டம்:  அமைதியாக நடந்த போராட்டத்தில் காவல் துறையினரின் வன்முறையைக் கண்டித்து  இன்று தமிழகத்தில் உள்ள பல முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

நீலகிரி குன்னூரில் வர்த்தகர்கள் கடையை மூடிவிட்டனர். திருச்செந்தூரிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாநகர பகுதியில் ஆர்பாட்டம் நடத்திய 1,500 பெண்கள் உட்பட 5,500 பொது மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென்காசி கடையநல்லூர், மணிக்கூண்டு போன்ற இடங்களில் போராட்டம் நடத்திய மறியல் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது காவல்துரையியான்ர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  கும்பகோணம் மாவட்டத்தில் ஒரு தபால் நிலையத்திற்கு வெளியே 1,000 க்கும் அதிமாகன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000க்கும் அதிகமான பது மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Anti caa nrc npr protest in washermenpet

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X