கோலம் போட்ட பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு – சென்னை போலீஸ் ‘பகீர்’ தகவல்

Anti caa protest - protester has pakistan connection : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலப்பேராட்டம் நடத்தி கைதான 7 பேரில் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

By: Updated: January 2, 2020, 05:00:57 PM

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோலப்பேராட்டம் நடத்தி கைதான 7 பேரில் ஒருவருக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ?

குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு ( NRC) எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை பெசன்ட் நகர் பகுதியில், கோலப்போராட்டம் நடைபெற்றது. அனுமதி இன்றி கோலப்போராட்டம் நடத்தியதாக 7 பேரை சென்னை போலீஸ் கைது செய்தது.

சென்னையில் துவங்கிய இந்த கோலப்போராட்டம், அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, திமுக தலைவர் ஸ்டாலின் வீடு, எம்.பி. கனிமொழியின் வீடு என அரசியல்வாதிகள் பலரும் தங்கள் வீடுகளின் முன் சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டனர்.

கோலப்போராட்டம் நடத்தி கைதானவர்களை விடுவிக்கக்கோரி பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் ஏ கே விஸ்வநாதன் கூறியதாவது, கோலப்போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்ட 7 பேரில், காயத்ரி என்பவருக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு அமைப்புடன் தொடர்பு இருப்பது அவரது பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்தபோது தெரியவந்தது.

காயத்ரியின் மற்ற சமூகவலைதள பக்கங்களையும் ஆராய்ந்து வருவதாகவும், அவருக்கு பாகிஸ்தானுடன் மற்ற ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை பல்கலைகழக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் போராட்டம் நடத்தியபோது, அந்த இடத்திலும் காயத்ரி இருந்துள்ளார்.

காயத்ரியின் பின்னணியை குறித்து ஆராய்ந்தபோது, தமிழ்நாட்டில் செயல்படும் சில அமைப்புகள் மற்றும் என்ஜிஓக்களின் ஆதரவு காயத்ரிக்கு உள்ளது தெரியவந்துள்ளது.

காயத்ரி தனது பேஸ்புக்கு புரோபைலில், researcher at Bytes for All, Pakistan என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் சிட்டிசன் ஜர்னலிஸ்ட்டுகளுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் குறித்த மற்ற விபரங்களை கண்டறியும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சிஏஏ மற்றும் என்ஆர்சி போராட்டத்தின் பின்னணியில் திமுக இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி புகார் தெரிவித்துள்ள நிலையில், கோலப்போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழியை சந்தித்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலம் போட்டதற்காக அவர்கள் கைது செய்யப்படவில்லை என்றும், தங்களது போராட்டத்தின் ஒருபகுதியாக கோலப்போராட்டம் நடத்தியவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Anti caa protest detained protester has pakistan connection chennai police

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X