Former minister-kamaraj | அதிமுக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் தொகுதி எம்.எல்.வு.மான காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.
இதனடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். அதாவது, பொதுவிநியோக திட்டத்தின்கீழ் அரிசி, பருப்பு வாங்கியதில் ரூ.350 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு நவ.1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
ஏற்கனவே அமைச்சர் காமராஜ் மீது, முன்னாள் அமைச்சர் காமராஜ், நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி, தஞ்சாவூரில் உள்ள நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் பெயரில் தனது நெருங்கிய கூட்டாளிகள் மூலம் சொத்துக்கள் வாங்கி பல வீடுகளை கட்டியதாக புகாரும் உள்ளன.
மேலும் அவரது மகன் உள்பட உறவினர்களின் பெயர்களும் விசாரணையில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திருவாரூர் தனிப்பிரிவு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்து 810 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில், “முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“