விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க தலைமையில் நடைபெறும் என்றும், மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம். மக்கள் பிரச்னைகளுக்காக எந்த சக்தியோடும் இணைவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசுகையில், மதுக்கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். போதைப்பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி வி.சி.க தலைமையில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம்"
மக்கள் பிரச்னைகளுக்காக எந்த சக்தியோடும் இணைவோம். மதுபோதையை விட சாதிவெறி மிக மோசமானது. சாதி மதவாத கட்சிகளோடு வி.சி.க ஒருபோதும் இணையாது. தி.மு.க தேர்தல் அறிக்கையிலேயே மதுவிலக்கு இடம்பெற்றுள்ளது, அதனை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
தொல்.திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க-வுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“