New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/06/1-2.jpg)
விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, இன்று(8.6.18) முதல் சென்னையிலிருந்து நெல்லைக்கு அறிமுகமாகியது.
தாம்பரம் - திருநெல்வேலி இடையே, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து இன்று முதல் துவங்கியது. முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்ட, அந்யோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு, இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயில் முழுவதும் முன்பதிவு இல்லாத ரயிலாக உள்ளது. இந்த ரயில் பாமர, நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரயில்வே இணை அமைச்சர், ராஜென் கோஹைய்ன், அந்யோதயா ரயில் போக்குவரத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த ரயில், 16191 என்ற எண்ணில் இயங்க உள்ளது.
அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் சேவையை விரைவாக இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்திவந்தனர். இந்தச் சூழலில், அந்த்யோதயா ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளக்து. இந்த ரயில் விருதுநகா், மதுரை, திண்டுகல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.