Advertisment

கோவையில் கேலோ இந்தியா போட்டி: அனுராக் தாக்கூர் உறுதி

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழா கோவையில் நடத்தப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cbe Anurag.jpg

கோவையில் கிருஷ்ணா கல்லூரி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று (செப்.23) திறந்து வைத்தார். அரங்கை திறந்து வைத்த அவர் மாணவர்களுடன் இணைந்து ஓட்டப் பந்தயத்தில்  ஓடியும், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடியும் வீரர்களை ஊக்குவித்தார்.

Advertisment

தொடர்ந்து விழாவில் பேசிய அவர், "எல்லா கல்வி நிறுவனங்களும் இதுபோன்ற சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கம் வைத்திருப்பார்கள் என சொல்ல முடியாது. இதுதான் இந்த கல்வி நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது.

ரஞ்சி கோப்பை வென்றேன்

பஞ்சாப் மாநிலத்தில் வளர்ந்த தான், அந்த மாநில கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போது ரஞ்சி கோப்பையை வென்றேன். 19 வயதுக்கு கீழான அணியில் இடம்பெற்று ரஞ்சி கோப்பையை வென்றேன். ஹிமாச்சல் கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்தது, மிகவும் சவாலாக இருந்தது. 2002 முதல் 2005ம் ஆண்டு வரை 5 புதிய விளையாட்டு அரங்கங்கள் இமாச்சலில் கொண்டு வந்தேன். 

Anurag.jpg

அதில், ஒன்றாக உலக தரத்திலான தரம்ஷாலா அரங்கம் உள்ளது. இளம் வயதில் அந்த அரங்கத்தை கட்டமைத்த போது எதற்காக இவ்வளவு பணத்தை போட்டு இங்கு அரங்கம் அமைக்கிறீர்கள் யாரும் வர மாட்டார்கள் என கூறினார்கள்.

இப்போது கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிய நடத்திய சூழலில் அடுத்த மாதம் மீண்டும் அதே மைதானத்தில் உலக கோப்பையை நடத்த உள்ளோம்" என்று தெரிவித்தார்.

மேலும் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு விழா பல்வேறு நகரங்களில்  நடைபெற உள்ள நிலையில் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள கோவை மைதான விளையாட்டரங்கிலும் சில போட்டிகள் நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். 

7.jpeg

இதையடுத்து கால்பந்து, கைப்பந்து, கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பந்துகளை வழங்கி வாழ்த்திய அமைச்சர் அனுராக் தாகூர் மைதானத்தில் சுமார் 600 மீட்டர் தூரம் ஓடியும் மாணவர்களுடன் கிரிக்கெட், கால்பந்து மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்ந்தார்.

செய்தி: பி.ரஹ்மான் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Sports
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment