பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணி உறுதியானது முதல் விமர்சனங்களும், சலசலப்பும் தொடர்ந்து கொண்டே உள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா, தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் காலூன்ற முடியாது என்றும், அக்கட்சியின் தமிழகக் கனவு ஒருபோதும் ஈடேறாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒரு தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெருமளவில் கிடைக்காது என்று அன்வர் ராஜா சுட்டிக்காட்டினார். மேலும், கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பா.ஜ.க. திட்டமிடுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அ.தி.மு.க. தவிடுபொடியாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் ஒரு போதும் காலூன்ற முடியாது என்றும் கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க. தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பா.ஜ.க. ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என்று திட்டவட்டமாக அன்வர் ராஜா தெரிவித்தார்.
பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும்பாலும் கிடையாது. கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாடு மக்கள் எந்தக் காலத்திலும் அதை விரும்பியதில்லை என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ஜ.க.வின் திட்டம் ஒருபோதும் பலிக்காது. எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று உறுதியாக கூறினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படும் ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்றார்.