/tamil-ie/media/media_files/uploads/2022/03/chennai-photo.jpg)
Apple CEO Tim Cook appreciates photos taken by Tamilnadu School students: ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஐபோன் 13 மினிஸில் தமிழக பள்ளி மாணவர்களால் ஐபோன் 13 மினி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கண்காட்சி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டிம் குக் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாற்பது உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஐபோன் 13 மினியில் தங்கள் சமூகங்களை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இப்போது அவர்களின் படைப்புகள் வரலாற்று சிறப்புமிக்க எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை புகைப்பட பைனாலே #ShotOniPhone க்கான மாணவர் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்று பதிவிட்டுள்ளார்.
டிம் குக் தனது ட்விட்டர் பதிவில் இரண்டு படங்களைப் பகிர்ந்துள்ளார். ஒன்று இயற்கைக்காட்சி, மற்றொன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் இரண்டு சிறுமிகளின் படம்.
Forty high school students from Tamil Nadu, India captured the vibrance of their communities on iPhone 13 mini. Now their work is featured in the student showcase at the historic Egmore Museum for the Chennai Photo Biennale. #ShotOniPhonehttps://t.co/t0DhNYWGvmpic.twitter.com/I30DTwZkbT
— Tim Cook (@tim_cook) March 25, 2022
எழும்பூர் அருங்காட்சியகத்தில் சென்னை போட்டோ பைனாலே அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த ‘ கதைகளின் நிலம் (A Land of Stories)’ என்ற கண்காட்சியில், தமிழகம் முழுவதும் இருந்து 40 மாணவர்கள் கிளிக் செய்த புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படங்கள். அவை ஏப்ரல் 17ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மாணவர்கள் படம் பிடித்துள்ள, துருப்பிடித்த கதவுகள், விரிசல் அடைந்த சுவர்கள் மற்றும் இயற்கை காட்சிகள், சென்னையின் தெருக்கள், விலங்குகள் மற்றும் மக்கள், மாணவர்கள் பல்வேறு நிழல்கள் மற்றும் வண்ணங்கள் அடங்கிய புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இதையும் படியுங்கள்: ‘ரூ2,600 கோடி முதலீடு, 9700 பேருக்கு வேலைவாய்ப்பு’ – துபாயில் ஸ்டாலின் ஒப்பந்தம்
இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள பைனாலே அமைப்பின் இணையதளம், மாணவர்களின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அதன் இணையதள பக்கத்தில், "இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட மாநிலத்தின் பாரம்பரியம், மாநிலம் முழுவதும் ஏராளமாகக் காணப்படுகிறது. அதைத்தான் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதிலும் இருந்து இந்த இளம் கலைஞர்கள் ஆவணப்படுத்த அழைக்கப்பட்டனர். இந்த கண்காட்சியானது தமிழகத்தையும் அதன் கதைகளையும் அவர்களின் லென்ஸ்கள் மூலம் சித்தரிக்கும் அவர்களின் புகைப்படங்களின் தொகுப்பாகும். மாணவர்களின் வடிகட்டப்படாத பார்வையும், தமிழ்நாட்டின் முடிவில்லா கதைகளும் ஒன்றிணைந்து, பார்வையாளரிடம் ஒரு அழுத்தமான கதையைத் தாக்கும் என்று நம்புகிறோம், ”என்று ஒரு குறிப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை போட்டோ பைனாலே அமைப்பு புகைப்படம் எடுப்பதை ஒரு பயிற்சியாகவும் கலை வடிவமாகவும் ஊக்குவிக்கிறது. பைனாலே அறக்கட்டளை மாணவர்களுக்கு புகைப்படம் எடுத்தல், இசையமைத்தல், ஒளியமைப்பு மற்றும் கதைசொல்லல் போன்றவற்றவை புகைப்படம் எடுத்தல் மூலம் பயிற்சியளிக்கிறது. இந்த அமைப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஐபோன்களை வழங்கி புகைப்படம் எடுக்க செய்து இந்த கண்காட்சியில் இடம் பெறச் செய்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.