scorecardresearch

செந்தில் பாலாஜிக்கு கோவை: மாவட்டம் வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

Appointment of responsible minister for Nagai and Salem districts
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த ஆர்.காந்தி திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார்.

தொடர்ந்து, நாகை, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை வருவாய் மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என்.நேருவும் தேனிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு மனைவியுடன் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அமைச்சர்கள் மாவட்டங்களின் நலத்திட்டப் பணிகளை கவனித்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Appointment of responsible minister for nagai and salem districts