மாஸ்க் இல்லைன்னா ஃபைன் போடுங்க! சாதி என்னன்னு கேக்க உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?

மாஸ்க் போடலைன்னா சாதிப் பேரெல்லாம் கேக்கனும்னு ஏதாவது உத்தரவு இருக்குதா உங்களுக்கு என்றும் சரமாரியாக கேள்வி கேட்டார் சிவக்குமார்.

AR constable accused for inquiring about caste for not wearing mask in Tiruppur

AR constable accused of inquiring about caste for not wearing a mask in Tiruppur :  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முக கவசம் அணிவது அவசியம் என்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முக கவசம் அணியவில்லை என்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பலரும் தங்களின் உறவினர்கள் மற்றும் தங்களின் உயிரை மனதில் கொண்டு தீவிரமாக இதனை பின்பற்றி வருகின்றனர்.

பின்பற்றாத நபர்கள் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதத்தையும் கூட சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் இருக்கும் நபர்கள் விதிக்க இயலாது.  திருப்பூர் மாவட்டம் அவினாசியில் விசிக கட்சியை சேர்ந்த பி.சிவக்குமார் தன்னுடைய மனைவியுடன் பெருமாநல்லூர் சென்றுள்ளார். அவருடைய மனைவி முக கவசம் அணிந்திருக்க, அவர் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்திருக்கிறார். அவர்களை நிறுத்திய ஆயுதப்படை பிரிவு கான்ஸ்டபிள் காசிராஜா, சிவக்குமாரின் பெயர் மற்ரும் முகவரி உள்ளிட்ட விபரங்களை கேட்டுள்ளார்.

சிவக்குமாரிடம் காசிராஜா சாதி பெயரைக் கேட்டதாக கூறப்படுகிறது. மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் செலுத்த சொல்லுங்கள், முகவரி இருக்கிறது. மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ முறைப்படி அதை செய்யுங்கள். “ரோட்டில் நின்று சாதிப் பெயரையெல்லாம் கேட்க கூடாதுங்க.. கொலையா செஞ்சோம் மச்ச அடையாளமெல்லாம் சொல்ல… ” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சிவக்குமார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவினாசி டி.எஸ்.பி. எல். பாஸ்கர், இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த மூன்று காவலர்களையும் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்தவுடன் இவர்கள் மீத் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ar constable accused for inquiring about caste for not wearing mask in tiruppur

Next Story
கதிரியக்க சிகிச்சைகளுக்கு பிறகு இன்று வீடு திரும்பினார் விஜயகாந்த்vijayakanth hospitalised, dmdk leader vijayakanth again hospitalised, vijayakanth admitted in hospital, விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி, விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், vijayakanth admitted in hospital in chennai, dmdk, premalatha vijayakanth
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com