சர்கார் சர்ச்சை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய ஐகோர்ட் தடை

சர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர். இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், […]

AR Murugadoss seeks bail, ஏ.ஆர்.முருகதாஸ்
AR Murugadoss seeks bail, ஏ.ஆர்.முருகதாஸ்

சர்கார் படத்தினர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் திரையரங்குகள் முன் அதிமுக- வினர் போராட்டம் நடந்தி வருகின்றனர்.

இந்நிலையில், முருகதாஸ் மீது நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டது. மேலும் சர்கார் படத்திற்கும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகின்றது.

ஏ.ஆர். முருகதாஸ் கைது? சன் பிக்சர்ஸ் தகவலால் கிளம்பிய பரபரப்பு… உச்சத்தை தொட்ட சர்கார் சர்ச்சை

இந்நிலையில் அப்படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நேற்று இரவு காவல்துறையினர் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றனர். எனவே தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கை என முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், பாதுகாப்பு காரணமாகவே இயக்குநர் முருகதாஸ் இல்லத்திற்கு சென்றதாக காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன்

இந்நிலையில், தன்னை காவல்துறை எந்நேரமும் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி இளந்திரையன் முன் ஆஜரான அவர் தரப்பு வழக்கறிஞர், இது தொடர்பாக முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என முறையிட்டார்.

அப்போது நீதிபதி இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதி அளித்தார். இதனை தொடர்ந்து முன் ஜாமீன் கோரி முருகதாஸ் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது

இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன் இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது, “தணிக்கை சான்று தந்த பின் ஒரு படத்தில் காட்சிகளை ஆளுங்கட்சியினர் நீக்க சொன்னது சட்டவிரோதம். சர்காரை பார்த்து பொதுமக்களோ, அரசுக்கு எதிரான போராளிகளோ போராடவில்லை. அரசுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் எண்ணத்தில் சர்காரை உருவாக்கவில்லை” என இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை நவ.27 வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ar murugadoss seeks bail from chennai highcourt

Next Story
உள்ளாட்சி தேர்தல் நடத்த எது தடை? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கேள்வி!உள்ளாட்சி தேர்தல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com