Advertisment

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்; உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AR Rahman, AR Rahman patented to producers, ஏ.ஆர்.ரஹ்மான், ஜிஎஸ்டி, சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர்களுக்கு காப்புரிமை, High Court interim bans of ar rahman GST notice, gst, madras high court

AR Rahman, AR Rahman patented to producers, ஏ.ஆர்.ரஹ்மான், ஜிஎஸ்டி, சென்னை உயர் நீதிமன்றம், தயாரிப்பாளர்களுக்கு காப்புரிமை, High Court interim bans of ar rahman GST notice, gst, madras high court

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, அவரை சேவை வரி செலுத்தும்படி, ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி., ஆணையர், கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள் தான் என சுட்டிக் காட்டியுள்ளார்.

காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4 ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

A R Rahman Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment