வெல்கம் டூ சென்னை- மக்களின் வரவேற்பை பெறும் செஸ் ஒலிம்பியாட் கீதம்!

இசைபுயல் ஏஆர் ரஹ்மான் வெல்கம் டூ சென்னை என்ற செஸ் ஒலிம்பியாட் பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

வெல்கம் டூ சென்னை- மக்களின் வரவேற்பை பெறும் செஸ் ஒலிம்பியாட் கீதம்!
சென்னை நேப்பியர் பாலம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட வீரர்- வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.
இந்த வெல்கம் டூ சென்னை பாடல் படப்பிடிப்பு நேப்பியார் பாலத்தில் நடைபெற்றது. பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

44TH Chess Olympiad 2022 Anthem | FT. Hon Chief Minister MK Stalin | @A. R. Rahman | Vignesh Shivan

முன்னதாக பாடலுக்கான முன்னோட்டத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் முழு பாடலை ஏஆர் ரஹ்மான் வியாழக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டார்.
இந்தப் பாடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பாடல் மக்கள் மத்தியில் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ar rahman released vanakkam chennai chess olympiad anthem