Advertisment

Arani Lok Sabha Election Results 2024: ஆரணி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தரணிவேந்தன் 2,07,433 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று ஜுன் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. ஆரணி தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
Arani candis

ஆரணி மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arani Election Results 2024 Live Update: ஆரணி மக்களவைத் தேர்தல் முடிவுகள் – 2024

Advertisment

ஆரணி மக்களவைத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

ஆரணி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தரணிவேந்தன் 4,97,083 வாக்குகள் பெற்று 2,07,433 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரன் 2,89,650 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 2வது இடத்தைப் பிடித்தார்.

பா.ஜ.க கூட்டணி கட்சியான பா.ம.க வேட்பாளர் கணேஷ் குமார் 2,34,538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்து 3-வது இடம் பிடித்தார்.

இதற்கு அடுத்து, நா.த.க வேட்பாளர் பாக்கியலட்சுமி 65,981 வாக்குகள் பெற்று 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

காலை 11 மணி நிலவரப்படி: தி.மு.க வேட்பாளர் தரணி வேந்தன் 14,099 வாக்குகள் பெற்று 4,691 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரன் 9,408 வாக்குகள் பெற்றுள்ளார்.
பா.ம.க வேட்பாளர் கணேஷ் குமார் 8,018 வாக்குகள் பெற்றுள்ளார்.
நா.த.க வேட்பாளர் கே. பாக்கியலட்சுமி 1,685 வாக்குகள் பெற்றுள்ளார். 

3 மணி நிலவரப்படி: ஆரணி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தரணிவேந்தன் 1,49,031 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அ.தி.மு.க வேட்பாளர் கஜேந்திரன் 93,676 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

பா.ம.க வேட்பாளர் கணேஷ் குமார் 74,847 வாக்குகள் பெற்றுள்ளார்.

நா.த.க வேட்பாளர் பாக்கியலட்சுமி 21,468 வாக்குகள் பெற்றுள்ளார்.

வந்தவாசி மக்களவைத் தொகுதியாக நீண்ட காலமாக இருந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் 2009-ல் ஆரணி மக்களவைத் தொகுதியாக உருவெடுத்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி மக்களவைத் தொகுதி, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செஞ்சி, மைலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரணி மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,90,440 இதில் ஆண் வாக்காளர்கள்: 7,31,824, பெண் வாக்காளர்கள்: 7,58,507, மூன்றாம் பாலின வாக்காளர்கள்:108 ஆவார்கள்.

2024 மக்களவைத் தேர்தலில், ஆரணி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஆரணி மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் எம்.எஸ். தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திலும், அ.தி.மு.க சார்பில் ஜி.வி. கஜேந்திரன் இரட்டை இலை சின்னத்திலும், பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் கணேஷ்குமார் மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் கே. பாக்கியலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் 2024 ஆரணி மக்களவைத் தொகுதியில், 11,59,441 வாக்குகள் பதிவாகி 74.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஆரணி மக்களவைத் தொகுதியின் வரலாறு: 

நீண்ட காலமாக வந்தவாசி தொகுதியாக இருந்து வந்த நிலையில், தொகுதி மறுவரையின்படி, 2009-ம் ஆண்டு ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. 

15வது மக்களவைத் தேர்தல் (2009)

2009-ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். கிருஷ்ணசாமி 3,96,728 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
அ.தி.மு.க சார்பில் எதிர்த்து போட்டியிட்ட என். சுப்ரமணியன் 2,89,898 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். தே.மு.தி.க சார்பில் போட்டியிட்ட ஆர். மோகனம் 1,05,729 வாக்குகள் பெற்றார்.


16 வது மக்களவைத் தேர்தல் (2014)


2014-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட  வி. ஏழுமலை 5,02,721 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க சார்பில் போட்டியிட்ட, ஆர். சிவானந்தம் 2,58,877 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அதே போல, பா.ம.க சார்பில் போட்டியிட்ட ஏ.கே. மூர்த்தி 2,53,332 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். காங்கிரஸ் கட்சி சார்பில்  போட்டியிட்ட விஷ்ணு பிரசாத் 27,717 வாக்குகள் பெற்றார்.


17-வது மக்களவைத் தேர்தல் (2019)

2019-ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவைத் தேர்தலில், ஆரணி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.கே. விஷ்ணு பிரசாத் 6,17,760 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஏழுமலை 3,86,954 வாக்குகள் பெற்று பெற்று தோல்வி அடைந்தார். சுயேச்சையாக போட்டியிட்ட ஜி. செந்தமிழன் 46,383 வாக்குகள் பெற்றார். நா.த.க சார்பில் போட்டியிட்ட ஏ. தமிழரசி 32,409 வாக்குகள் பெற்றார். ம.நீ.ம சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 14,776 வாக்குகள் பெற்றார். 

18-வது மக்களவைத் தேர்தல் (2024

இந்நிலையில், 18-வது மக்களவைத் தேர்தலில் ஆரணி மக்களவைத் தொகுதியில், தி.மு.க சார்பில் எம்.எஸ். தரணிவேந்தன் போட்டியிடுகிறார். 

அ.தி.மு.க சார்பில் ஜி.வி. கஜேந்திரன் போட்டியிடுகிறார். 

பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் கே. பாக்கியலட்சுமி போட்டியிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 ஆரணி மக்களவைத் தொகுதியில், 11,59,441 வாக்குகள் பதிவாகி 74.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment