அறந்தாங்கி நிஷா ஐஇ தமிழ் நேரலையில் வாசகர்களுடன் உரையாடல்

Aranthangi Nisha: கலகலப்பு 2, மாரி 2 படங்களில் நடித்திருக்கிறார். தனது கலகலப்பான பேச்சால் பெரிய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார்.

By: Updated: May 3, 2020, 08:55:06 PM

Aranthangi Nisha indian express tamil facebook live: நடிகையும், பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரமும் ஆன அறந்தாங்கி நிஷா, இன்று ஐஇ தமிழ் முகநூல் நேரலையில் வாசகர்களுடன் உரையாடுகிறார். வாசகர்கள் தங்கள் கேள்விகளை முன்வைக்கலாம்.

அறந்தாங்கி நிஷா, தமிழ் சினிமா, டி.வி, மேடைக் கலையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாகி வருபவர். கலக்கப்போவது யாரு சீசன் 5-ல் ரன்னர்ஷிப் ஆன இவர், கலகலப்பு 2, மாரி 2 படங்களில் நடித்திருக்கிறார். தனது கலகலப்பான பேச்சால் பெரிய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கிறார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது கலகலப்பு உரைகளை அரங்கேற்றி வருகிறார் அறந்தாங்கி நிஷா.

ஐஇ தமிழ் முகநூல் நேரலை நிகழ்ச்சியில் தொடர்ந்து பிரபலங்கள் பங்கேற்று வருகிறார்கள். அந்த அடிப்படையில் இன்று (மே 3) அறந்தாங்கி நிஷா கலந்து கொண்டு பேசுகிறார். வாசகர்கள் தங்கள் கேள்விகளை ஐஇ தமிழ் முகநூல் பக்கத்தின் கமெண்ட் பாக்ஸில் முன்வைக்கலாம். அவற்றுக்கு நிஷா பதில் சொல்வார்.


இன்று இரவு 7.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது. வாசகர்களை இணைந்துகொள்ள வேண்டுகிறோம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Aranthangi nisha vijay tv actress ietamil fb live

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X