Advertisment

போக்குவரத்துத் துறை தேசிய நெடுஞ்சாலை ஹோட்டல்களில் சோதனை செய்வதில்லை; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஓட்டல்களில் தர சோதனை செய்வதில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டிய நிலையில், தமிழக அரசு போக்குவரத்துத் துறை விதிகளை மீறும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
போக்குவரத்துத் துறை தேசிய நெடுஞ்சாலை ஹோட்டல்களில் சோதனை செய்வதில்லை; அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

தமிழ்நாடு போக்குவரத்து துறை ஹோட்டல்களில் தர சோதனை செய்வதில்லை என்று அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டிய நிலையில், தமிழக அரசு போக்குவரத்துத் துறை விதிகளை மீறும் உணவு விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லும் போது, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் வழியில் நிறுத்தப்படும் ஹோட்டல்களில் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தவறிவிட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அரசு, விதிகளை மீறும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு விரைப் போக்குவரத்துக் கழகத்தின் (எஸ்.இ.டி.சி) பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் வழியில் உணவுக்காக நிற்கும் ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளின் மோசமான பராமரிப்பு மற்றும் விதிமுறை மீறல்களை என்பது அறப்போர் இயக்கம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது. எஸ்.இ.டி.சி பேருந்துகளில் பயணித்தவர்கள் மூலம் சமூக தணிக்கை நடத்தியதால், ஓட்டல்கள் விதிமுறைகளை பின்பற்றவில்லை என, ஒரு வாரத்திற்கு முன், தமிழ்நாடு போக்குவரத்து துறை முதன்மை செயலாளரிடம், அறப்போர் இயக்கம் புகார் அளித்தது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) மற்றும் எஸ்.இ.டி.சி ஆகியவை இந்த ஓட்டல்களை நடத்துவதற்கும் பராமரிப்பதற்கும் ஒரு ஆண்டுக்கு டெண்டர் விடுகின்றன. டெண்டர் விதிகளின்படி, ஹோட்டல்கள் பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் இலவச கழிப்பறை வசதிகளை வழங்க வேண்டும். தாங்கள் நடத்தும் கடைகளில் பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க வேண்டும் உணவு உட்கொள்ளும் பயணிகளுக்கு அல்லது அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கினால் கணினிமயமாக்கப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும். தரம் குறித்து தெரிவிக்க புகார் பெட்டியை வைத்திருக்க வேண்டும். இந்த ஹோட்டல் எஸ்.இ.டி.சி-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல் என்று பெயர் பலகை வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது.

இருப்பினும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சில ஹோட்டல்களில் சோதனை செய்தபோது ஹோட்டல்கள் இந்த விதிமுறைகளை முற்றிலும் மீறுவதைக் கண்டறிந்ததாக தெரிவித்தனர். கழிவறைகள் அசுத்தமாக இருந்தன. அவற்றைப் பயன்படுத்துவதற்கு பயணிகளிடம் ரூ. 5 முதல் ரூ.10 வரை வசூலிக்கிறார்கள். உணவின் தரம் மற்றும் பொருட்களின் தரம் குறைவாக இருந்தது. அவர்களின் கடைகளில் பொருட்கள் எம்.ஆர்.பி விலைக்கு அதிகமாக விற்கப்பட்டது. இந்த விதிகளில் ஒன்றைக்கூட இந்த ஹோட்டல்கள் -பின்பற்றவில்லை எனத் தெரிந்ததால், புகைப்படம் எடுத்து தங்களுக்கு அனுப்புமாறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, பல ட்விட்டர் பயனர்கள் எஸ்.இ.டி.சி வகுத்துள்ள விதிமுறைகளை மீறிய பேருந்துகள் மற்றும் ஹோட்டல்களின் புகைப்படங்களை வெளியிட்டனர்.

செங்கல்பட்டு, திண்டிவனம், கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், விக்கிரவாண்டி, புதுச்சேரி உள்ளிட்ட 13 நிறுத்தங்கள் அடங்கிய பட்டியல் தமிழக அரசிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அறப்போர் அளித்துள்ளது. ஒரு ஹோட்டலுக்கு அருகிலுள்ள நிறுத்தம் ஒன்றில், பயணிகள் ஓய்வறை வசதியைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று ஒரு பெரிய பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கத்தின் எம் ராதாகிருஷ்ணன், எஸ்.இ.டி.சி-யால் உரிமம் பெற்ற ஹோட்டல்களின் எண்ணிக்கை பட்டியலைக் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் கோரியிருந்தார். அதற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005-ன் பிரிவு 8 (1) (டி)ஐ மேற்கோள் காட்டி, இவை வியாபார ரகசியங்கள் எனக் கூறி இந்த தகவலை வெளியிட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எஸ்.இ.டி.சி சோதனைகளை நடத்தியதா, இந்த காலகட்டத்தில் மீறுபவர்களுக்கு எதிராக என்ன அபராதம் விதிக்கப்பட்டது போன்ற விவரங்களையும், எஸ்.இ.டி.சி-க்கு வந்த புகார்களின் நிலையையும் அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கோரியுள்ளது. அவர்களின் இரண்டாவது ஆர்.டி.ஐ மேல்முறையீட்டிலும், மேற்கண்ட கேள்விகளுக்கு, கேள்விகள் பொதுவானவை எனக் கருதப்பட்டதால், அறப்போர் இயக்கம் இதேபோன்ற பதில்களைப் பெற்றுள்ளது.

“இது ஒரு வெளிப்படையான டெண்டராக இருந்தால், எஸ்.இ.டி.சி அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்களின் எண்ணிக்கையின் பட்டியலை பொதுவில் வெளியிட வேண்டும். அதில் உள்ள வியாபார ரகசியம் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை” என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

அறப்போர் இயக்கத்தின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, எஸ்.இ.டி.சி நிர்வாக இயக்குனர் கே இளங்கோவன், indianexpress.com இடம் கூறுகையில், “அரசாங்க விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.

“சுமார் மாநிலம் முழுவதும் சுமார் 30 விடுதிகள் உள்ளன. டெண்டரை ஒதுக்குவதற்கு முன்பு நாங்கள் தணிக்கை செய்கிறோம். நாங்கள் அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து, பயணிகளிடமிருந்து புகார் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கிறோம். கழிவறையைப் பயன்படுத்துவதற்கு பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதாக ஒரு ஓட்டல் மீது புகார் வந்தபோதும், எங்கள் அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மத நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களிடம் இருந்து மட்டுமே கட்டணம் வசூலித்ததாகவும், குளிப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் கழிவறையை பயன்படுத்தியதாகவும், பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவில்லை என்றும் ஹோட்டல் மேலாளர் கூறினார். பிரச்னை எதுவும் இல்லை என்று நாங்கள் கூறவில்லை. ஆனால், விரைவில் அவற்றைத் தீர்க்க எங்களால் முடிந்த முயற்சியை நாங்கள் செய்கிறோம்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பயணிகளிடமிருந்து வந்த புகாரின் அடிப்படையில் விக்கிரவாண்டியில் உள்ள ஓட்டல் ஒன்றின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் வெளியிட்ட செய்திக் குறிப்புப்படி, “ஹோட்டல்கள் மீது புகார்கள் வந்ததையடுத்து, திடீர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உத்தரவிட்டார். விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையின் இருபுறமும் அமைந்துள்ள வேல்ஸ் ஹோட்டலை அதிகாரிகள் வியாழக்கிழமை பார்வையிட்டபோது, அந்த விடுதியில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்குவதும், தின்பண்டங்களை எம்.ஆர்.பி-க்கு மேல் அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்தது.

தற்போது அந்த விடுதியின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளர். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், போக்குவரத்துத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Arappor Iyakkam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment