அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு மின்வாரியத் துறை அமைச்சராக இருந்தபோது, டிரான்ஸ்ஃபார்மர் வாங்க போடப்பட்ட ஒப்பந்தங்களில் நடந்த முறைகேடால் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் விஜிலன்ஸில் புகார் அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரியத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், செந்தில் பாலாஜி, மின்வாரிய உயர் அதிகாரிகள், டிரான்ஸ்ஃபார்மர் வாங்குவதற்காக டெண்டர் விடுவதில் முறைகேடு செய்ததாகவும் அதனால், அரசுக்கு ரூ.397 இழப்பு ஏற்பட்டதாக ஊழல் ஒழிப்பு இயக்கமான அறப்போர் இயக்கம், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் அளித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர் அதிகாரிகள், டிரான்ஸ்ஃபார்மர் வாங்குவதற்கான டெண்டர்களில் முறைகேடு செய்ததாகக் குற்றம் சாட்டி, அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் (டி.வி.ஏ.சி) புகார் அளித்துள்ளது.
பலவிதமான டிரான்ஸ்ஃபார்மர்கள் (மின்மாற்றிகள்) வாங்குவதற்கான டெண்டர்களை வழங்கியதில் ஊழல், கூட்டு, சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 25 KVA (கிலோ வோல்ட் ஆம்ப்ஸ்) முதல் 500 KVA வரையிலான டிரான்ஸ்பார்ம்களுக்கு 2021 மற்றும் 2023-க்கு இடையில் வழங்கப்பட்ட டெண்டர்கள் தொடர்பாக அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.
டிரான்ஸ்ஃபார்மர் வாங்குவதற்கான டெண்டர் பணிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறும் அறப்போர் இயக்கம், இந்த முறைகேடால் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த புகார் மனுவில், தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்வாரிய அதிகாரிகள் நிதிக் கட்டுப்பாட்டாளர் வி. காசி, ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஷ் லகோனி மற்றும் பிற அரசு ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
10 டெண்டர்களை ஆய்வு செய்த அறப்போர் இயக்கம், ஏலதாரர்கள் மற்றும் பொது ஊழியர்களிடையே வேண்டுமென்றே கூட்டு, சதி, ஊழல் மற்றும் பிற சட்டவிரோதங்களுக்கு நடந்துள்ளது. இது அரசு கருவூலத்துக்கு கணிசமான தொகை இழப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு சிலருக்கு லாபத்தையும் அளித்துள்ளது என்று கூறியுள்ளது.
இந்த அனைத்து டெண்டர்களிலும், 20-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் பங்கேற்றதாகவும், அவர்கள் டெண்டர்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட தொகையை சமர்ப்பிக்க சதி செய்ததாகவும் அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. 20-க்கும் மேற்பட்ட ஏலதாரர்கள் ஒரே விலையாக ஒப்பந்தப் புள்ளியைக் கோரியிருப்பது சாத்தியமில்லை என்று அறப்போர் இயக்கம் கூறியுள்ளது.
செந்தில் பாலாஜி அமைசராக இருந்த காலத்தில் டிரான்ஸ்ஃபார்மர் வாங்க போடப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அறப்போர் இயக்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஆரம்பிக்கலாங்களா..? கேள்விகளை கேட்க ஆரம்பிக்கலாங்களா..?
பல விதமான Transformer வாங்க போடப்பட்ட பல ஒப்பந்தங்களில் போட்டியிட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையை Quote செய்தது எப்படி? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரே தொகையை, அதுவும் சந்தை விலையை விட மிக அதிகமாக Quote செய்திருந்தும் அந்த டெண்டர்களை ரத்து செய்யாதது ஏன்? செட்டிங் செய்தது யார்? யாரெல்லாம் இந்த செட்டிங் டெண்டர்களால் பயனடைந்தார்கள்?
ஆதாரங்களுடன் விளக்கும் விரிவான வீடியோ பாருங்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதில் சொல்வாரா? DVAC வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமா? செய்தி தொலைக்காட்சிகள் விவாதங்களை நடத்துமா? எதிர்க்கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா?
பதில் கிடைக்கும் வரை அறப்போர் தொடரும்..!
ஊழல் குறித்த புகார் மற்றும் ஆதாரங்களை பார்க்க - http://arappor.in/EB_Scam_400Cro” என்று பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.