சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: 24 மணி நேரத்துக்கு பிறகும் நடவடிக்கை எடுக்காதது ஏன் - அறப்போர் இயக்கம் கேள்வி

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்த பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்த பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
API savukku shankar

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 24 மணி நேரம் கடந்த பிறகு, காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சவுக்கு சங்கர் மற்றும் அவரது தாயார் மீதான வன்முறை மற்றும் அருவருப்பான தாக்குதலை அறப்போர் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இப்படி ஒரு இழிவான செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், சம்பவம் நடந்து 24 மணி நேரம் ஆகியும் கூட தாக்குதல் மற்றும் இந்த இழிவான செயல்களை செய்தவர்கள் மீது நாம் எந்தவித சட்ட நடவடிக்கையும் பார்க்கவில்லை என்றால் அரசுக்கும் அரசில் இருக்கின்ற அதிகாரம் படைத்தவர்களுக்கும் இந்த தாக்குதலிலோ அல்லது தாக்கியவர்களை காப்பாற்றுவதிலோ பங்கு உள்ளது என்றுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

இதுபோன்ற தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நம்மை ஒரு அநாகரீகமான சமூகத்தை நோக்கி எடுத்துச் செல்கிறதா என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் வன்முறையையும் வீடு புகுந்து சேதப்படுத்துவதையும் ஊக்குவிப்பது போல உள்ளது.

Advertisment
Advertisements

வன்முறை பொருள்  சேதம் செய்தவர்களைக் காப்பாற்றுதல், பேச்சுரிமை, கருத்துரிமையை முடக்குதல் போன்ற அரசின் தொடர் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை துளி அளவும் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் மதிப்பதில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் அதன் மூளையாக செயல்பட்டவர்கள் மீதும் அவர்களை காப்பாற்றும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்த காவல்துறை அதிகாரிகள் மீதும் கிரிமினல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Arappor Iyakkam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: