Advertisment

உங்க வேட்பாளர்களின் சொத்துக் கணக்கு, குற்ற வழக்கு: முழு தகவல் அடங்கிய செயலி வெளியிட்ட அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் விளவங்கோடு (சட்டமன்ற இடைத் தேர்தல்) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய செயலியை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Arappor Iyakkam launch Know Your Candidates APP for LS polls 2024 Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Arappor Iyakkam | Lok Sabha Election 2024: நாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மற்றும் விளவங்கோடு (சட்டமன்ற இடைத் தேர்தல்) ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் ஒட்டுமொத்த வேட்பாளர்களின் விவரங்கள் அடங்கிய செயலியை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. 'வாக்களிக்கச் செல்லும் முன் உங்கள் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் தெரிந்துகொண்டு வாக்களியுங்கள்' என்று அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், உங்கள் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? எந்த சின்னத்தில் அவர்கள் போட்டியிடுகிறார்கள்? அவர்கள் பெயர் படிப்பு, வேலை, சொத்து மற்றும் குற்ற வழக்கு விவரங்கள் என்ன? போன்ற விவரங்கள் அனைத்தையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செயலியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Arappor Iyakkam Lok Sabha Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment