Advertisment

அரிக்கொம்பன் யானை இறக்கவில்லை... ஆரோக்கியமாக உள்ளது; சமூக வலைதள செய்திகளுக்கு வனத்துறை மறுப்பு

அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறான செய்தி என தெரிவித்த தமிழக வனத்துறை அரிக்கொம்பன் ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Arikomban Elephant

அரிக்கொம்பன் யானை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறான செய்தி என தெரிவித்த தமிழக வனத்துறை அரிக்கொம்பன் ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Advertisment

கடந்த ஆண்டு இடுக்கி வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரவிய செய்திகளை மறுத்த தமிழக வனத்துறை, அரிக்கொம்பன் யானை இறக்கவில்லை, ஆரோக்கியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் புகுந்து அடிக்கடி சேதப்படுத்தி அரிசியின் மீது அதிக ஆர்வம் காட்டி வந்த 'அரிக்கொம்பன்' யானை, கடந்த ஆண்டு ஏப்ரலில் சின்னக்கானலில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டது. அந்த யானை அங்கிருந்து பெரியார் புலிகள் காப்பகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, 'அரிக்கொம்பன்' தேனியின் குடியிருப்பு பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இது கம்பத்தில் ஒருவரின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு வழிவகுத்தது. அதன் எதிரொலியாக, அதே ஆண்டு ஜூன் மாதம் களக்காடு-முண்டந்துறை வனச்சரகத்திற்கு அருகே அரிக்கொம்பன் யானை இடமாற்றம் செய்யப்பட்டது.

இடுக்கி வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டு, ஜூன் 2023-ல் திருநெல்வேலியில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கம்பம் பகுதியில் விடப்பட்ட அரிகொம்பன் யானை, நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது. கம்பம் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் அருகே சுற்றிக்கொண்டிருந்த அரிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஜூன்6-ம் தேதி விட்டனர்.

வனத்துறையின் தொழில்நுட்ப பிரிவு, அந்த யானையை 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அது தொடர்பான தகவல்கள், களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அரிக்கொம்பன் யானை இடமாற்றம் செய்து 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது மேல் கோதையார் அணை பகுதியில் தனது வாழ்விடத்தை அமைத்துக் கொண்டுள்ளது. அந்த யானை தற்போது ஆரோக்கியமாக உள்ளது.

அதன் உணவு தேடும் முறை சிறப்பாகவே உள்ளது. அண்மைக்காலமாக மனித குடியிருப்புகள், விவசாய நிலங்களை தேடி வராத வகையில் அதன் பழக்கமும் மாறியுள்ளது. இந்த யானை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சராசரியாக தினமும் 3 கிமீ தொலைவுக்கு சுற்றி வருகிறது. கடந்த ஜன.28-ம் தேதி முத்துக்குழிவயல் பகுதியில் அரிக்கொம்பன் உலாவியதை களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் மற்றும் மத்திய அரசின் பாதுகாப்பு தணிக்கை அணியினர் நேரில் பார்த்துள்ளனர். அந்த யானை உயிருடன் ஆரோக்கியமாகவே உள்ளது” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிக்கொம்பன் யானை இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள், மோசமானவை, தவறானவை என்று கூறி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பாதுகாவலரும் கள இயக்குனருமான ஏ.எஸ். என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arikomban Elephant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment