/indian-express-tamil/media/media_files/L4cAGpICxn5rJJuiMjH6.jpeg)
Ariyalur firecrackers factory explosion
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி தயாரிப்பு கடையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடிகள் வெடித்த நிலையில், 10 பேர் அங்கிருந்து தப்பித்து வெளியேறியதாக தெரிகிறது. விபத்தில் பலத்த காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ பரவல் காரணமாக விபத்து நடத்த பகுதியில் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
எப்போதும் 10 மணிக்கு தான் வேலைக்கு ஆட்கள் வந்ததற்கான வருகை பதிவேடு கணக்கெடுக்கப்படும். 9 மணிக்குள்ளாக விபத்து ஏற்பட்டதால், வேலைக்கு வந்தவர்கள் யார், யார் என இதுவரை தெரியவில்லை. இதனால் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது.
இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான அளவில் வெடி பெருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சமீபத்தில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில்பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.