தீடிரென காரில் பற்றி எரிந்த தீ: அரியலூரில் ஹோட்டல் ஓனர் உடல் கருகி பலி

அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வந்த அன்பழகன், ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துகுள்ளானது.

அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயங்கொண்டத்தில் உணவகம் நடத்தி வந்த அன்பழகன், ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துகுள்ளானது.

author-image
WebDesk
New Update
Ariyalur hotel owner killed road accident car catches fire after hitting median Tamil News

அரியலூரை அடுத்த ஆண்டிமடம் அருகே நடுரோட்டில் கார் தீ பிடித்து ஹோட்டல் உரிமையாளர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அன்பழகன் ஓட்டி வந்த கார் சென்டர்மீடியனில் மோதி விபத்துகுள்ளாகியிருக்கிறது. இதனால், காரில் இருந்து பெட்ரோல் கசிந்ததால் மளமளவென தீ பிடித்துள்ளது. 

Advertisment

இதனால் உடனடியாக அன்பழகன் காரை விட்டு கீழே இறங்க முயற்சித்தும் அவரால் கீழே இறங்க முடியவில்லை. சக வாகன ஓட்டிகள் கார் கண்ணாடியை உடைத்து காரில் இருந்து அன்பழகனை மீட்க முயற்சிதும் முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறைக்கு உடனடியாக இது குறித்து தகவல் தெரிவித்தனர். 

அதற்குள் திடீரென கார் முழுவதும் தீ மளமளவென பரவிய நிலையில், பொதுமக்கள் கண் முன்னாடியே அன்பழகன்  காருக்குள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து அன்பழகனின் சடலத்தை மீட்டனர். சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Ariyalur accident

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: