/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-14-at-11.59.49-AM.jpeg)
Minister Anbil Mahesh
அரியலூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (மார்ச் 14) வருகை தந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கான உணவுகள் தரம், அடிப்படை வசதிகள், பிளஸ்1 தேர்வு நடைபெறும் மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-14-at-11.59.49-AM-1.jpeg)
/tamil-ie/media/media_files/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-14-at-11.59.49-AM-2.jpeg)
இதனைத் தொடர்ந்து, பள்ளி மைதானம், விளையாட்டு உபகரணங்கள் குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அரியலூரில் பிளஸ்1 தேர்வு மையத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு#Ariyalurpic.twitter.com/B7AHvnoTlw
— Indian Express Tamil (@IeTamil) March 14, 2023
பின்னர், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க நிகழ்ச்சி மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஆய்வின்போது, அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி உட்பட பலரும் உடனிருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.