தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை காலில் விழ வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜூலை 14ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில், செந்துறை அருகே உள்ள வளர்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவரும், பாஜக பிரமுகருமான எஸ்.அன்பரசன் (36), ஜூலை 8ஆம் தேதி தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது, அன்பரசனின் உறவினர்கள் பட்டாசுகளை வெடித்து, ஆதிக்க சாதியினர் வசிக்கும் தெரு வழியாக அன்பரசன் இல்லத்திற்கு வந்தனர்.
மறுநாள் அன்பரசன் தன் மகளை பள்ளியில் இருந்து அழைத்துச் சென்றபோது ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் அவரை வழிமறித்து, பட்டாசுகளை வெடித்ததற்காகவும், அவர்களின் தெருவில் நடந்து சென்றதற்காகவும் மிரட்டி உள்ளனர், மேலும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை அச்சுறுத்தினார்.
ஜூலை 11ஆம் தேதி, அதே பகுதிக்கு அருகே சிகரெட் வாங்கச் சென்ற அன்பரசனின் சகோதரர் திருநாவுக்கரசுவை, அவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் காவல்துறையின் தலையீட்டிற்கு வழிவகுத்தது, அவர்கள் இரு தரப்பினரையும் சமாதானப் பேச்சுக்கு அழைத்தனர்.
அடுத்த நாள், இரு சமூகத்தினரும் தங்கள் தலைவர்களுடன் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு பேச்சு வார்த்தைக்கு கூடினர். இந்த சந்திப்பின் போது, திருநாவுக்கரசு ஆதிக்க சாதியினர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து, இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று உறுதியளிக்க வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அன்பரசன் அளித்த புகாரின் பேரில், பி.கண்ணன், எஸ்.ராமச்சந்திரன், எஸ்.ராஜேஷ், ஆர்.ரமேஷ், எஸ்.அருள், கே.வேலுசாமி ஆகிய 6 பேர் உட்பட, 30 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 147 (கலவரம்), 294b (பொது இடத்தில் ஆபாசமாக பேசுவது), SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 உட்பட பல பிரிவுகளின் கீழ் போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, முக்கிய குற்றவாளிகளில் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கிராமத்தில் நிலைமை சாதாரணமாக உள்ளது. இரு சமூகத்தினரும் பல வருடங்களாக நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்,. ஜூலை 11 அன்று திருநாவுக்கரசு, குடிபோதையில் கண்ணனையும் அவரது குடும்பத்தினரையும் துஷ்பிரயோகம் செய்ததாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன, இது மேலும் பதற்றத்திற்கு வழிவகுத்தது, என்று அந்த அதிகாரி கூறினார்.
காவல் நிலையம் வருவதற்கு முன், இரு சமூகத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்.சி. சமுதாயத் தலைவரின் உத்தரவின் பேரில்தான் திருநாவுக்கரசு மற்ற சமூகத்தினர் முன் பணிந்தார். புகாரைப் பெற்ற உடனேயே உயர் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம், என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“