நீட் தேர்வு தோல்வி பயம்: அரியலூர் மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

NEET exam : அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் கருணாநிதி ஜெயலட்சுமி தம்பதியினர். வழக்கறிஞர்களாக பணியாற்றி வரும் இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகள் கனிமொழி, நாமக்கல் க்ரீன் கார்டனில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 562.28 மதிப்பெண்கள் பெற்ற அவர், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தாமரை இன்டர் நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.

கனிமொழி நேற்று தன்னுடைய வீட்டில் தனியாக இருந்த போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த விதமான பிரச்சனைகளுக்கும் தற்கொலை என்பது ஒரு முடிவல்ல. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற தயக்கம் காட்டாதீர்கள். இலவச ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும் சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் ; அலைபேசி எண் +91 44 2464 0050, +91 44 2464 0060

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ariyarlur school student who wrote neet exam committed suicide

Next Story
மாநில அரசு பணிகளில் சேர தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் – தமிழக அரசு அதிரடிtamil language exam. today news, tamil news, tamil nadu news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com