இஸ்லாமிய வகுப்புவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தி.மு.க செயல்படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
கோவை சங்கமேஷ்வரர் கோவில் முன்பு நடந்த கார் குண்டு வெடிப்பு உலகத்தையே உலுக்கி இருக்கிறது, சங்கமேஷ்வரர் அருளால்தான் கோவை காப்பாற்றப்பட்டிருக்கிறது எனக் கூறி, அதற்கு நன்றி சொல்லும் விதமாக இந்து மக்கள் கட்சியினர் கோட்டை சங்கமேஷ்வரர் கோவிலில் வழிபாடு செய்தனர்.
இதையும் படியுங்கள்: கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி!
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அர்ஜீன் சம்பத், இந்த கார் குண்டு வெடிவிபத்து இங்கு நடக்கவில்லை என்றால், அது எங்கேயோ வெடித்து பெரியளவில் இழப்பு ஏற்பட்டிருக்கும். அதை நினைத்தாலே நெஞ்சம் நடுங்குவதாக தெரிவித்தார்.
இந்த விபத்து நடந்து இதுவரை முதலமைச்சர் கண்டிக்கவில்லை. மற்ற கட்சிகள் மெளனம் காக்கின்றனர். பா.ஜ.க மட்டுமே இதை கண்டித்துள்ளது. சம்பவ இடத்திற்கும் எந்த அரசியல்வாதியும் வரவில்லை என அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டினார்.
இதே மற்ற மதத்தினர் வழிபாட்டுத்தளம் அருகே இது போன்ற விபத்து ஏற்பட்டு இருந்தால் அனைத்து கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருப்பார்கள் என்று அர்ஜூன் சம்பத் கூறினார்.
தி.மு.க.,வின் 15 மாத ஆட்சியில் சிறுபான்மையினர் என்ற உறவிலே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்து விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. இந்து பெண்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தும் ஆ.ராசா போன்றவர்களை ஸ்டாலின் கண்டிக்கவில்லை. இந்த ஆட்சி பயங்கரவாதிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பாதுகாப்பு அளித்து வருவதாக அர்ஜூன் சம்பத் குற்றம் சாட்டினார்.
அல் உம்மா தீவிரவாதிகள் வெளியே வருவதற்கும், அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை இந்த அரசு செயல்படுத்துகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதிகள் ஆக்கமும் ஊக்கமும் பெற்று விடுகிறார்கள்.
இந்து மக்கள் கட்சியின் சார்பாக தமிழக அரசை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டத்தை கோவில் முன்பு நடத்துவதாக இருந்தது. என்.ஐ.ஏ விசாரணைக்காக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கார் குண்டு வெடிப்பு என சம்பவம் நடந்து 12 மணிநேரத்திற்குள் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர், அவர்களை பாராட்டுவதாக அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
கவர்னர் ரவி சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு தான் என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏன் தாமதம் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் இல்லை என்றும் அர்ஜூன் சம்பத் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil