திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் முன்னால் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை தொடர்பான வழக்கில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆஜரானார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறார்.
நீதிபதி மாறுபட்ட தீர்ப்பு வழங்குகிறார். நீதிபதியின் தீர்ப்பு வியப்பை அளிக்கிறது. இதுவே ஒரு சாதாரண பிரஜை மனுத் தாக்கல் செய்தால் இப்படி நடக்குமா?
அதனால்தான், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். பொது சிவில் சட்டம் அமல்படுத்தினால் பல்வேறு பிரச்னைகள் வரும் என்று வேண்டுமென்றே பலர் பொய் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்பதனை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். அம்பேத்கர் இதனை தெளிவாக கூறியுள்ளார். தமிழகத்தில் கல் குவாரிகள் ஸ்டிரைக்கால் கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்துள்ளது.
வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. கனிம வளத்தை முறைப்படுத்த வேண்டும். ஆளுநர் தனது கடமையை சிறப்பாக செய்து வருகிறார்.
ஆனால், ஆளுநருக்கு எதிராக திட்டமிட்டு அவதூறை திமுக பரப்புகிறது.
நடிகர் விஜய், மாரி செல்வராஜ், ரஞ்சித் ஆகியோர் திமுகவின் பிரச்சார சாதனத்தை பயன்படுத்தி திமுகவில் பட்டியல் இன மக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள்.
மாமன்னன் யாரு என்றால் அது பழைய சபாநாயகர் தனபால்தான். நடிகர் ஜோசப் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம்.
விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வர வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் வரவேண்டும். அது எங்களது கோரிக்கை” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“