/tamil-ie/media/media_files/uploads/2023/04/arjun-sambath.jpg)
தி. மு. க. , மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, வரும் 13-ம் தேதி அறப்போராட்டம் நடத்தப்படும்.
Arjun Sampath Trichy Press Meet : திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (அக்.9) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “உலக புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில், சுவாமி தரிசனம், வாகன நிறுத்தக் கட்டணம், சுங்கக் கட்டணம் என் பல வழிகளில் வருவாய் உயர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால், அந்தப் பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அம்மனை தரிசிக்க கட்டாய தரிசன கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சமயபுரம் பகுதி மக்களுக்கு, கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
சமயபுரம் பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடைஅடைப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம், அறநிலையத்துறை கலந்து பேசி உள்ளூர் மக்களுக்கு கட்டண வசூல் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், அனைத்து கோயில்களிலும் கட்டண தரிசனம் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் உள்ள கோயில்கள் அருகே இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 100 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோவில், ஒரு வாரமாக பூட்டிக் கிடக்கிறது. அதை திறக்க ஆவண செய்ய வேண்டும்.
காவிரி ஆணையம், நீதிமன்ற உத்தரவை அவமதித்து, காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுக்கிறது. அந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், தி. மு. க. , மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கண்டித்து, வரும் 13-ம் தேதி அறப்போராட்டம் நடத்தப்படும்.
தி.மு.க.,வையும் அ.தி.மு.க.,வையும் வேண்டாம் என்று நினைப்பவர்கள், லஞ்ச ஊழலை எதிர்ப்பவர்கள் ஒரு அணியாக திரண்டு வருகின்றனர்.
இந்த அரசியல் மாற்றத்துக்கு, இந்து மக்கள் கட்சி நிச்சயம் துணை நிற்கும். அல் உம்மா, பாகிஸ்தான் ஆதரவாளர்கள், கம்யூ., மற்றும் திராவிட கட்சிகள் இயக்கத்தினர், ஹமாஸ் இயக்கத்தை ஆதரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை கண்காணிக்க வேண்டும்” என்றார்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.