மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் பெரம்பர் செம்பியம் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன் ஆதரவாளர்களுடன் பேசி கொண்டிருந்த போது, 3 இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க, நா.த.கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் 8 பேர் சரணடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை என்று கூறியுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆம்ஸ்ட்ராங் கொலை அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து தனது X பக்கதில் பதிவிட்டுள்ள அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்.
தமிழ்நாடு அரசுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சி மாயவதி நாளை சென்னை வருகை தந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். நாளை (ஜூலை 7) காலை சென்னை வரும் அவர் அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் லக்னோ செல்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“