கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட டெல்லியில் இருந்து துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளனர்.
துணை ராணுவத்தினருடன் இணைந்து காவல் துறையினர் பங்கேற்ற கொடி அணி வகுப்பு ஊர்வலம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் அருகே தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் கோவை சாலை, அரசு மருத்துவமனை , கடைவீதி, பேருந்து நிலையம் வழியே வந்த அணிவகுப்பு காவலர் திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. அணிவகுப்பில் துணை ராணுவப் படையினர் காவல்துறையினர் என மொத்தம் 481 பேர் பங்கேற்றனர்.
வரும் மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி, 100 சதவீதம் வாக்களிக்கவும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும் பாதுகாப்பு தொடர்பாக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும், பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“