/tamil-ie/media/media_files/uploads/2021/12/cats-5.jpg)
சுக்குநூறாக நொறுங்கிய ஹெலிகாப்டர்: பிரத்யேக புகைப்பட காட்சிகள்
வெலிங்டன் ராணுவ முகாமிற்கு செல்ல வெறும் 10 கி.மீ தொலைவே இருந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் என்ற இடத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/12/cats-5.jpg)
Advertisment
Army helicopter carrying CDS General Bipin Rawat crashes photos : நீலகிரி குன்னூர் அருகே ராணுவ முப்படைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இன்று காலை சூலூரில் இருந்து 11.47 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வெலிங்டன் ராணுவ முகாமிற்கு செல்ல வெறும் 10 கி.மீ தொலைவே இருந்த நிலையில் நஞ்சப்பசத்திரம் என்ற இடத்திற்கு அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக கேட்டறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து நீலகிரிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீயணைப்புத்துறையினர் ஒன்றரை மணி நேரம் போராடி இந்த தீயை அணைத்துள்ளதாக கூறப்படுகிறது
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் அதிகாரிகள் எம்.ஐ. -17வி5 என்ற ஹெலிகாப்டரில் இவர்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். விபத்திற்கான காரணம் என்ன என்பதை விசாரிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் இன்று பிற்பகல் கேடட் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த சி.டி.எஸ் ராவத் சக ராணுவ வீரர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் வெலிங்கடன் சென்றனர்.
விபத்தில் தப்பிய நான்கு பேர் குன்னூர் ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தமிழக காவல்துறை மற்றும் குன்னூரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. “அனைவருக்கும் தீக்காயங்கள் இருந்தன. கோவை பொது மருத்துவமனையில் இருந்து 6 மூத்த மருத்துவர்கள் அடங்கிய முதல் குழு குன்னூர் மருத்துவமனைக்கு வந்துள்ளது” என்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. இந்தியப்படை தளபதி பிபின் ராவத், மதுலிகா ராவத் , ஜிதேந்திர குமார்,ஹர்ஜிந்தர் சிங்,சாய் தேஜா,விவேக் குமார்,குருசேவாக் சிங்,எல்.எஸ்.லிடர்,ஹாவ் சாட்பால் ஆகியோர் ஆவர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.