/indian-express-tamil/media/media_files/1cPmcx6GXfD1Txo3fJkH.jpg)
மருத்துவ தாவரங்களின் பயன்பாடு என்பது மனிதர்களின் நோய்களை குணப்படுத்துவதற்கான சிறந்த அமுதமாக வரலாற்றுக் காலம் முதல் அமைந்துள்ளது.
18ஆம் நூற்றாண்டில் நவீன மருத்துவத்தின் வருகையினால் வெகுவாக பயன்பாட்டில் இருந்த தொன்மையான பழக்கவழக்கங்களும், மூலிகை மருத்துவமும் அதன் தனித்துவத்தை இழக்க ஆரம்பித்தது. மேலும் அனைவரது எண்ணங்களில் இருந்தும் மறைய ஆரம்பித்துள்ளது.
உடல் மற்றும் மனம் இரண்டையும் குணப்படுத்தும் மருத்துவ தாவரங்கள் மற்றும் மரங்களைப் பயன்படுத்தும் பழங்கால நடைமுறையை மீட்டெடுக்கும் ஒரு முன்முயற்சியாக - சிறுதுளியுடன் - பிரிக்கால் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ குணங்கள் கொண்ட மரங்கள் மற்றும் மூலிகை வகைகளை உள்ளடக்கிய ஒரு செழிப்பான சுற்றுச்சூழலை அமைக்கும் விதமாக உருவானது – “ஆரோக்ய வனம்”. தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழாவானது கோவை பேரூர் செட்டிபாளையம் உள்ள பச்சாபாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த வனத்தில் உள்ள தாவரங்களின் வேர்கள், தண்டு, கிளைகள், இலைகள் மற்றும் பூக்கள் மனித குலத்திற்கு மிகவும் பயன்படுகிறது.
இதயம், வயிறு, நுரையீரல், எலும்புகள் மற்றும் தோல் போன்ற நமது உடலின் அத்தியாவசிய பாகங்கள் முக்கியமாக தாவரங்களிலிருந்து பயனடையும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நடப்பட்ட 120 வகையான மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகளை இங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க இவை பங்களிக்கின்றன.
மியாவாக்கி மாதிரியை அடிப்படையாகக் கொண்டு, அமைப்பைச் சுற்றி மொத்தம் 650 மருத்துவ மரங்கள் நடப்பட்டன. ஆரோக்யா வனம் பற்றி டாக்டர்.ஜி.சிவராமன் தனது சிறப்புரையில் நாட்டு மூலிகைகள் மற்றும் மருந்துகளின் திறன் பற்றி விரிவாகப் பேசினார். எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்க இதுபோன்ற பல முயற்சிகளை ஊக்குவிப்பதில் இங்குள்ள அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.