Advertisment

உயிர் முக்கியம்... அரியர் மாணவர்களுக்காக பேரவையில் ஒலித்த கே.பி அன்பழகனின் குரல்!

தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வினை எழுதவே தயாராக இல்லை என்றுதான் அர்த்தம்

author-image
WebDesk
New Update
arrear students all pass anna university

arrear students all pass anna university

arrear students all pass anna university : அரியர் மாணவர்கள் பயப்பட வேண்டாம் என்று சட்டப்பேரவையில் உயர்கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Advertisment

கடந்த 24-ம் தேதி தமிழகத்திலுள்ள கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இறுதி பருவத் தேர்வு எழுதும் மாணவர்களைத் தவிர மற்ற அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.இந்நிலையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழும தலைவர் அனில் சகஸ்ரபுதே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதத்தின் வாயிலாக பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வு ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது எனத் தெரிவித்தார்.

இதனிடையே, அரியர் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கழகம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தமிழக அரசின் முடிவிற்கு ஏ.ஐ.சி.டி.இ. எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனக் கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அதுபோன்ற மின்னஞ்சலோ, கடிதமோ இருந்தால் அதனை வெளியிட வேண்டும் எனக் கூறியிருந்தார். ஆனால், இதுவரையில் அது தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ.யின் அதிகாரப்பூர்வமாக எந்த மின்னஞ்சலும் வெளியாகவில்லை.

இந்நிலையில், நேற்று (16.9.10) சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் அரியருக்கு பணம் கட்டிய மாணவர்கள் தேர்ச்சியா? இல்லையா என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ பொன்முடி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.பி அன்பழகன், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கு விசாரணை முடிந்தபின் அறிவிக்கப்படும் தீர்ப்பின் படியே அரியர் மாணவர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

யூ.ஜி.சி., மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., வழிகாட்டுதகல்களின் படியே தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.எந்த உள்நோக்கமும் பாகுபாடும் இல்லாமல் மாணவர்கள் உயிர் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு அறிவித்த அறிவிப்பு தான் அரியர் பாஸ். மேலும் அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் தன்னுடைய பர்சனல் மெயில் ஐடி மூலமாக ஏ.ஐ.சி.டி.இ.-க்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். இதனால் மாணவர்கள் இதுகுறித்து கவலையடைய வேண்டாம் எனவும், தேர்வு கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வினை எழுதவே தயாராக இல்லை என்றுதான் அர்த்தம் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment