அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு; அரசின் முடிவில் மாற்றமில்லை அமைச்சர் உறுதி
முதல்வர் பழனிசாமி அனைத்து அரியர் தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உறுதி தெரிவித்துள்ளார்.
anna university latest news , anna university bifurcation
முதல்வர் பழனிசாமி அனைத்து அரியர்ஸ் தேர்வுகளையும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவித்த நிலையில், அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் அரசின் முடிவில் மாற்றமில்லை என்ரு உறுதி தெரிவித்துள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, முதல்வர் பழனிசாமி இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதவர் பழனிசாமி கடந்த மாதம் ரத்து செய்தார். மேலும், அரியர்ஸ் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
முதல்வர் பழனிசாமி அரியர்ஸ் தேர்வு ரத்து செய்ததையும் தேர்ச்சி என அறிவித்ததையும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மாணவர்கள் பலரும் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்தனர்.
இந்த சூழலில், தமிழகத்தில் அனைத்துக் கல்லூரிகளிலும் அரியர்ஸுக்கு கட்டணம் கட்டிய மாணவர்கள் அனைவரும் பாஸ் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக அர்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார். மேலும், அரியர்ஸ் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று என்று கூறினார்.
இது குறித்து உயர் கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன், “ AICTE சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்த கருத்தையும் மறுத்துள்ளார். மேலும், அதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பப்பட்டு இருப்பின் அதனை சூரப்பா வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக AICTE சார்பில் எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை எனவும், துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை, AICTE-இன் கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை. அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பாவின் கருத்தை AICTE கருத்தாக திணிப்பது கண்டிக்கத்தக்கது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசு, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களின் அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அரியர்ஸ் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"