ஆபாசப்படம் கண்காணிப்பு விவகாரம் : போலீசாக பேசிய நபர் மீது விசாரணை
தனிமனித வாழ்வை அரசாங்கம் கண்காணிப்பது சட்டத்திற்கு புறம்பானது. குழந்தைகள் பாலியல் வன்முறை சட்டத்தால் கண்டிகத்த்தக்கது. எனவே, இதுகுறித்த போதுமான விளக்கங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும்
குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் அல்லது அதனை இணையதளத்தில் பதிவிறக்கம், பதிவேற்றம் செய்வதும் குற்றம் என தமிழக போலீசார் தெரிவித்து இருந்தனர். சில நாட்களாகவே இணையதளைத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களை போலீசார் மறைமுக கண்காணிக்கின்றனர் என்ற தவறான கருத்தும் மக்களிடம் பரவலாகி வருகிறது.
Advertisment
இந்நிலையில், திருநேல்லேலி மாவட்டத்தில் ஆபாச படங்களை பார்த்ததாக ஒரு இளைஞரை, போலிஸ் ஒருவர் மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வளத் தளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், தன்னை காவலர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த இளைஞரிடம் பேசுகையில்," உங்களுக்கு இதுவரை நூற்றுக்கணக்கான முன்னெச்சரிக்கை நோட்டிஸ் கொடுக்கப்பட்டுவிட்டது, இருந்தாலும் நீங்கள் எதற்கும் பதிலளிக்க வில்லை. மொபைல் போனில் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி தவறு, இதனால் நீங்கள் 7000 வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என்று காட்டமாக கூறினார்.
இந்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட அந்த இளைங்கருக்கு ஒரு கட்டத்துக்குள் மேல் பேசவதற்கு மனமும்வரவில்லை, வாரத்தையும் வரவில்லை.
பிறகு, இந்த உரையாடல் காவல்துறை வரை சென்றது. இந்த உரையாடலுக்கும், காவல் துறையினருக்கும் எந்த விதமான சமந்தம் இல்லை என்று முழுமையாக நம்பியது. உரையாடலை விசாரித்த காவல் அதிகாரிகள், போனில் பேசிய நபர் அந்த இளைஞரின் நண்பர் தான் எனக் கண்டரிந்தனர். என்ன காரணங்களுக்காக, என்ன நோக்கத்திற்காக இந்த உரையாடல் நடைபெற்றது என காவல் துறையினர் வழக்கு போட்டு விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக, குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்பி வரும் 3 குழுக்கள் பற்றிய முழு தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறையினர் செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர். காவல் துறையினரின் கண்காணிப்பு, தனிமனித உரிமை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. தனிமனித வாழ்வை அரசாங்கம் கண்காணிப்பது சட்டத்திற்கு புறம்பானது. குழந்தைகள் பாலியல் வன்முறை சட்டத்தால் கண்டிகத்த்தக்கது. எனவே, இதுகுறித்த போதுமான தகவல்களை, அறிவிப்புகளை, செயல்பாடுகளை மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காவல் துறையினருக்கு உண்டு என்றே கூறவேண்டும்.