ஜெயலலிதா மரணம் தொடர்பாக மருத்துவர் குழுவை அமைக்க தயார் - ஆறுமுகசாமி ஆணையம்

அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடரலாமே தவிர அறிக்கை அளிப்பதற்கு முன்னரே விசாரணை சரியானது இல்லை என கூறுவது தவறு

அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடரலாமே தவிர அறிக்கை அளிப்பதற்கு முன்னரே விசாரணை சரியானது இல்லை என கூறுவது தவறு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arumugasamy Commission

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை விதிக்க கோரியும், அதன் வழக்கு விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்தவர்கள் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Advertisment

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் ஆஜராகி இருந்த மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷ் தற்போதைய விசாரணை ஆணையம், விசாரணை சட்டத்தின் படிதான் செயல்படுகிறது எனவும், அதற்கான விதிகள் மற்றும் வரையறைகளின் படி அது செயல்படுவதாகவும் இதில் எந்த விதி மீறலும் இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் பிற வழக்குகளைப் போன்று குற்ற விசாரணை செய்யும் அமைப்பு இதுவல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். அதோடு, ஆணையத்தில் ஒருதலைபட்சமாக விசாரணை நடைபெறுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது எனவும் ஆணையத்திற்கு எதிராக இது போன்ற குற்றச்சாட்டுகளை எழுப்பவே முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உண்மைத் தன்மைகளை கண்டறியவும் தற்போது உள்ள தேவையற்ற புரளிகளை களைவதற்கும் தான் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தன் வாதத்தில் முன் வைத்தார்.

Advertisment
Advertisements

மருத்துவம் தொடர்பான தகவல்களை அரசின் மூத்த மருத்துவர்கள், மருத்துவதுறை வல்லுநர் ஆகியோரிடம் அது தொடர்பான வார்த்தைகள் சரிபார்க்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த அவர், இதுவரை 155 பேரிடம் விசாரணை நடந்து இருப்பதாகவும், ஆணையம் தனது 90 சதவீத விசாரணைகளை முடித்து விட்டதாகவும் நினைவுக் கூர்ந்தார். விசாரணை முடிவடைந்த பிறகு அறிக்கை அரசிடம் அளிக்கபடும். அந்த அறிக்கையை சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் எதிர்த்து வழக்குத் தொடரலாமே தவிர அறிக்கை அளிப்பதற்கு முன்னரே விசாரணை சரியானது இல்லை என கூறுவது தவறு என்றார்.

மருத்துவ வல்லுநர் குழுவை, மனுதார் அமைக்கக் கூடாது எனவும், உயர் நீதிமன்றம் ஆணையிட்டால் அதனை ஆணையமே ஏற்படுத்தத் தயாராக இருப்பதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞர் சுந்தரேஷ் தெரிவித்தார்.

அப்பல்லோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆணையம் அரசியல் விசாரணைகளை இதுவரை விசாரிக்கவில்லை எனவும் அப்பல்லோ மருத்துவர்களை மட்டுமே விசாரிப்பதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து வழக்கு விசாரணை வரும் செவ்வாய் கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

Justice Arumugasamy Jayalalithaa

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: