Advertisment

அப்போலோவில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேரில் ஆய்வு

அப்போலோவில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நேரில் ஆய்வு

author-image
WebDesk
Jul 29, 2018 19:30 IST
வarumugasamy probe commission

arumugasamy probe commission

ஜெயலிலதா சிகிச்சை பெற்ற அப்போலோவில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 2வது தளம், அவசர சிகிச்சை பிரிவு உட்பட 10 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையச் செயலாளர் கோமளா அப்போலோவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வக்கீல்கள் நிரஞ்சன், பார்த்தசாரதியும் உடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா இறப்புக்கு பிறகு முதன்முறையாக அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். ஜெ. சிகிச்சை பெற்ற 2 வது தளம், அவசர சிகிச்சை பிரிவிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அரவிந்தன், ராஜாசெந்தூர் பாண்டியன் அப்பலோக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு இணைந்திருங்கள்...

#Apollo Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment