முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாணை ஆணையம் அதன் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விசாரணை ஆணையத்தின் துணை ஊழியர்களுக்கு பிப்ரவரி 10, 2021 முதல் ஆறு மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கவும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலாஸ் மாஹாலின் முதல் மாடியில் இருந்து செயல்பட்டு வருகிறது. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஆணையத்தின் காலத்தை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆணையம் கடிதம் எழுதியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆணையம் எழுதியுள்ள அந்த கடிதத்தில், அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததால், விசாரணை நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் அதன் காரணமாக விசாரணையில் முன்னேற முடியவில்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது.
அப்போலோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் இரண்டு சிறப்பு விடுப்பு மனுக்களை தாக்கல் செய்ததையடுத்து ஏப்ரல் 26, 2019 அன்று தடை உத்தரவு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கடைசியாக, கடைசியாக மாநில அரசு தடை உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு டிசம்பர் 9, 2020 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற அமர்வு அரசியலமைப்பு விவகாரத்தில் ஆர்வம் காட்டியதால், நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டதால், உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை ஒத்திவைத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணை ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி எழுதிய கடிதத்தில், ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவை நீக்குவது தொடர்பான சட்டப் போராட்டத்தில் சட்டப்பூர்வமாக தொடரவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்த தமிழக அரசின் வழக்கறிஞர்கள் மீது குறை கூறியது.
மேலும், விசாரணை ஆணையம் எழுதியுள்ள அந்த கடிதத்தில் உச்ச நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை நீக்குவதற்கு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கும், அதனை விசாரணைக்கு பட்டியலிடப்படுவதற்கும் கடுமையான முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. அதோடு, தமிழக அரசு வழக்கறிஞரும் கூடுதல் தலைமை வழக்கறிஞரு இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணைகளை ஒரு மௌனப் பார்வையாளராக தாமதப்படுத்த அனுமதிக்கிறார்கள் என்று கூறியுள்ளது.
தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் எழுதிய கடிதத்தின்படி, அப்போலோவின் வழக்கால் ஒரு மருத்துவ வாரியத்தின் அமைப்பை அனுமதிக்கும். அதே நேரத்தில் ஆணையத்தின் நிலைப்பாடு ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் வழங்கிய சான்றுகளை மேலானதாக இருக்கும் என்று தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"