அதிமுக பொதுச்செயலாளரும், அப்போதைய முதலமைச்சருமான ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பேச்சுகள் எழும்ப தொடங்கின. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் தற்போது அறிக்கையை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கை இன்று (அக்.17) சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது. அப்போது சசிகலா மீது சந்தேகங்கள் இருப்பதாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் இரகசியமாக வைக்கப்பட்டன.
அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சைக்கு பரிந்துரையளிக்கப்பட்ட பின்னரும் சிகிச்சை வழங்கப்படவில்லை என்பன போன்ற பல்வேறு தகவல்கள் அடங்கியுள்ளன.
அப்பல்லோ அறிக்கைகள் பொய்
இந்த நிலையில் அப்பல்லோ வெளியிட்ட அறிக்கைகள் பொய் என்றும் ஆணையம் தனது விசாரணையில் வெளிக்கொண்டுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார் என்றெல்லாம் கூறப்பட்டது.
மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்தனர். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ள கருத்துகள் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க 2017ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நபர் தலைமையிலான ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தார்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவுக்கு எதிராக ஒ. பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிலை செல்லவும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இணைந்து ஆட்சியை நடத்தினர்.
இந்த நிலையில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம், முதலில் ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இந்த 10க்கும் மேற்பட்ட முறை ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“