Advertisment

25-30 சதவீதம் வட்டி எனக்கூறி ரூ.2500 கோடி மோசடி: ஆரூத்ரா நிர்வாக இயக்குனர் துபாயில் கைது

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி வசூலித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Aarudhra scam raja sekar

ஆரூத்ரா கோல்ட் நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டார்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கே.ஹரிஷ் உள்பட இருவரை பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
தொடர்ந்து கூடுதல் இயக்குநராக இருந்த தொண்டியார்பேட்டையைச் சேர்ந்த ஜே.மாலதியையும் கைது செய்யப்பட்டார்.
ஆரூத்தை நிறுவனம் செப்டம்பர் 2020 மற்றும் மே 2022 க்கு இடையில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பணத்தை நிறுவனம் வசூலித்துள்ளதாகவும், அவர்களின் டெபாசிட்டுகளுக்கு 25% முதல் 30% வரை வட்டி தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
டெபாசிட் செய்தவர்களை ஏமாற்றிவிட்டதால், மக்கள் அந்த நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு, IPC இன் 420 (ஏமாற்றுதல் மற்றும் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்தல் (BUDS) சட்டம் மற்றும் தமிழ்நாடு வைப்பாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் (TNPID)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.
மொத்தம், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், பட்டாபிராமன் மற்றும் மேலாளர்கள் - ரஃபிக், அய்யப்பன் மற்றும் இரண்டு முகவர்கள் உட்பட 8 முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆரூத்ரா நிர்வாக இயக்குனர் ராஜசேகர் துபாயில் இன்று கைது செய்யப்பட்டார். ராஜ சேகருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisment

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம், முதலீடு செய்யும் பணத்திற்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment