10 லட்சம் மக்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்…. நீங்கள்?

காவலன்-எஸ்ஓஎஸ் செயலியை 10 லட்சம் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். எனவே, நீங்களும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயோன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

By: Updated: January 2, 2020, 05:00:47 PM

பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள, தமிழக காவல் துறை ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற செயலியை  கடந்த டிசமபர் மாதம்  அறிமுகப்படுத்தியிருந்தனர்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

பெண்கள் ஏதேனும் ஆபத்தை உணர்வார்களாயின் இந்த  செயலியில்  உள்ள எஸ்.ஓஎஸ் பொத்தானை ஒரு முறை அழுத்தினாலோ அல்லது மூன்று முறை உதறினாலோ காவல் கட்டுபாட்டு அறைக்கு அபாய மணி சென்று விடும்.

இதனால், பெண்கள் பாலியல் வல்லுறவு சிக்கும் போது, தங்கள் போனை எடுத்து போலிசாரிடம் பேசத்  தேவையில்லை. இந்த செயலியை பயன்படுத்தும் பயணியின் அப்போதைய இருபிடத் தகவல்கள், அந்த இடத்தின் வரைபடம் போன்ற தகவல்கள் காவல் துறையினருக்கு தானாகவே சென்று விடும்.

அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து இது வரை இந்த செயலியை  இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பதிவு இறக்கம் செய்துள்ளனர்.

காவலன் – எஸ்ஓஎஸ் பயன்பாட்டை எவ்வாறு பதிவிறக்குவது?

காவலன் எஸ்ஓஎஸ்  செயலி ஆண்ட்ராயிட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கிறது. பயனர்கள், இந்த செயலியை கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.


 எவ்வாறு பயன்படுத்துவது?

பயன்பாட்டைப் பதிவிறக்கிய பிறகு, உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை வழங்க வேண்டும்.

உங்களின் தனிப்பட்ட மொபைல் எண்

வீட்டு முகவரி

மாற்று மொபைல் எண்

மின்னஞ்சல் முகவரி

பிறந்த தேதி

பாலினம்

இரு உறவினர்கள் (அ) நெருங்கிய நண்பர்களின் மொபைல் எண், பெயர்  மற்றும் இதர அவசர தொடர்புகள் குறித்தும் குறிப்பிட வேண்டும். (ஒரே நகரத்தில் இருப்பது மிகவும் நல்லது ) கூடுதலாக, அவசர கால தொடர்புக்காக  மூன்றாவது நபரும் சேர்க்கப்படலாம்.

மேலே உள்ள விவரங்களை உள்ளிட்ட பின்பு , உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு  ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும் . ஒன் டைம் பாஸ்வேர்ட்டை  உள்ளிட்ட வேண்டும்.   இறுதியாக, காவலன் முகப்புத் திரை (ஹோம் ஸ்க்ரீன்  ) உங்கள் மொபைல் தொலைபேசியில் காண்பிக்கப்படும்.

அலைவரிசை தொடர்பு  (Network) இல்லாத இடங்களிலும் இந்த காவலன் ஆப் செயல்படும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:As kavalan app download touched 1 million in tamil nadu you need to know how to download and use the kavalan app

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X